கொலையாளிக்கும் திருடனுக்கும் குற்றத்திற்கு ஒரு காரணம் இருக்கும்..கங்கனா ரனாவத் ட்வீட்!

டெல்லி:சண்டீகர் விமான நிலையத்தில் தன்னை கன்னத்தில் அடித்த சிஐஎச்எச் ஃப் காவலரைப் பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பக்கத்தில் கற்பழிப்பாளர், கொலைகாரன் அல்லது திருடனுக்கும் எப்போதும் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு வலுவான காரணம் இருக்கும் இதற்காக தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா என கேட்டுள்ளார்.

நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த போது அங்கிருந்த CISF பெண் காவலருடன் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அந்த பெண் காவலர் அறைந்தார்.

Kangana Ranaut CISF officer Twitter

கங்கனாவை கன்னத்தில் அறைந்த காவலரான குல்விந்தர் கவுர், கங்கனாவை தாக்கியதற்கான காரணத்தை கூறினார். அதில், அதில், 100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார் என தெரிவித்துள்ளார். மேலும், கங்கனாவை தாக்கியதற்காக அந்த பெண் அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஏதாவது ஒருகாரணம் இருக்கும்: அந்த பெண்ணுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நடிகை கங்கனா தனது எக்ஸ் தள பக்கத்தில், கற்பழிப்பாளர், கொலைகாரன் அல்லது திருடனுக்கும் எப்போதும் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு வலுவான உணர்ச்சி, உளவியல் என ஏதாவது காரணம் இருக்கும், எந்தக் குற்றமும் காரணமின்றி நடக்காது, ஆனாலும் அவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். குற்றவாளிகளுடன் நீங்கள் இணைந்திருந்தால், நாட்டின் அனைத்து சட்டங்களையும் மீறி ஒரு குற்றத்தைச் செய்வதற்கான உந்துலாக அமைந்து விடும்.

Kangana Ranaut CISF officer Twitter

கொலை செய்தாலும் பரவாயில்லையா?: ஒருவரை அவரின் அனுமதியின்றி, அவர்களின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரியாக இருந்தால், நீங்கள் கற்பழிப்பு அல்லது கொலை செய்தாலும் பரவ இல்லையா? உங்களின் உளவியல் குற்றப் போக்கை தயவு செய்து மாற்றுங்கள். யோகா, தியானத்தை மேற்கொள்ளுங்கள், இல்லையெனில் வாழ்க்கை கசப்பான மற்றும் சுமையான அனுபவமாக மாறும், இவ்வளவு வெறுப்பு, மற்றும் பொறாமை ஆகியவற்றைச் சுமக்காதீர்கள் என்று கங்கனா காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X