தலைவிக்காக தாறுமாறாக ஏற்றிய உடம்பு.. இப்போ 20 கிலோ குறைத்து விட்டு எலும்பும் தோலுமாக மாறிய கங்கனா!

சென்னை: தலைவி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அதற்காக ஏற்றிய உடம்பை வேக வேகமாக குறைத்துள்ளார் கங்கனா ரனாவத்.

பாலிவுட் பிரபலங்கள் ஒரு பக்கம் என்றால், கங்கனா ரனாவத் மறுபக்கமாக நின்று பலரையும் எதிர்த்து வருகிறார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை தொடர்ந்து, பாலிவுட் பிரபலங்களை கூண்டோடு ஜெயிலுக்கு அனுப்ப தீவிரம் காட்டினார்.

ஜெயலலிதா பயோபிக்கில்

ஜெயலலிதா பயோபிக்கில்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பயோபிக்கில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். ஜெயம் ரவியின் தாம் தூம் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் ‘தலைவி' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஏ.எல். விஜய் இந்த படத்தை பிரம்மாண்டமான முறையில் இயக்கி வருகிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடர்ந்து 10 நாட்கள் தலைவி பட ஷூட்டிங் நடைபெற்றது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் தலைவராக ஜெயலலிதா மாறிய தலைவி பட காட்சிகளின் புகைப்படங்களை சமீபத்தில் கங்கனா ரனாவத் வெளியிட்டு வைரலாக்கினார்.

வெயிட் போட்டார்

வெயிட் போட்டார்

நடிகையாகவும், முதல்வராகவும் கலக்கிய இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்காக 20 கிலோ வரை தனது உடல் எடையை அதிகரித்து நடித்து இருந்தார் கங்கனா ரனாவத். புராஸ்தெடிக் மேக்கப் எல்லாம் போட்டு, பலூன் பொம்மை போல மாறிய அவரது ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டன.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடும் போர்வையில், தனக்கு பிடிக்காத பாலிவுட் பிரபலங்களை பழி தீர்க்கும் நடவடிக்கையில் கங்கனா செயல்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மகாராஷ்ட்ரா அரசையும் பகைத்துக் கொண்ட அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

சமீபத்தில், தங்களின் வாழ்வாதார உரிமைக்காக போராடிய விவசாயிகளை, தீவிரவாதிகள் என குறிப்பிட்டு ட்வீட் செய்த கங்கனா ரனாவத்துக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் கொதித்து எழுந்தனர். அதன் விளைவாக தொடரப்பட்ட வழக்கில், தற்போது கங்கனா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எலும்பும் தோலுமாக

எலும்பும் தோலுமாக

சர்ச்சைகள் ஒரு புறம் இருக்க, ஷூட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார் கங்கனா ரனாவத். தலைவி படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த படத்திற்காக ஏற்றிய 20 கிலோ எடையை குறைத்து எலும்பும் தோலுமாக ஒல்லி பெல்லியாக யோகா செய்யும் போட்டோவை போட்டு வைரலாக்கி வருகிறார் கங்கனா ரனாவத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X