உத்தரவின்றி உள்ளே வராதே.. உசுருக்கு உத்தரவாதம் இல்லை.. ரியல் சந்திரமுகியாகவே மாறிய கங்கனா ரனாவத்!
மும்பை: சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் தனது வீட்டுக்கு வெளியே மாட்டியுள்ள எச்சரிக்கை பலகை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தொடர்ந்து ஏகப்பட்ட சர்ச்சைகளை சிக்கி வருகிறார்.
இந்தி சினிமாவில் நெப்போட்சம் அதிகரித்து வருவதையும், பாலிவுட்டில் பலரும் போதைக்கு அடிமையானவர்கள் என பேசியதால் ஏகப்பட்ட பிரபலங்களே கங்கனா ரனாவத்துக்கு எதிராக உள்ளனர்.

சந்திரமுகி 2 ஹீரோயின்
தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்த கங்கனா ரனாவத் பல ஆண்டுகளுக்கு பின்னர் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து அசத்தி இருந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. இந்நிலையில், அடுத்ததாக பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் படு தோல்வி
தாம்தூம் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த கங்கனா ரனாவத் குயின் படத்திற்காக தேசிய விருது வென்றார். ஆனால், அதற்கு பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்து வருகிறது. அதன் காரணமாகவே கோலிவுட் பக்கம் கங்கனா கவனம் செலுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

உள்ளே வந்தா சுட்டுருவேன்
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை கங்கனா ரனாவத் புதிதாக கட்டி வரும் தனது வீட்டுக்கு வெளியே வைத்திருக்கும் எச்சரிக்கை பலகை பாலிவுட் பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்தால் சுட்டுருவேன் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்.

ஹிட்லரை விட மோசம்
துப்பாக்கிச் சூடு பட்டு யாராவது தப்பித்தால் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என அந்த அறிவிப்பில் இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் கங்கனா ரனாவத் ஹிட்லரை விட மோசம் என திட்டித் தீர்த்து வருகின்றனர். மேலும், சில நெட்டிசன்கள் எல்லாம் யாராவது கங்கனா வீட்டுக்கு போவாங்களா என்றும் கலாய்த்து வருகின்றனர்.

ரியல் சந்திரமுகி
சந்திரமுகி படத்தில் நடித்து ரியல் சந்திரமுகியாகவே பேயாக மாறிவிட்டாரா கங்கனா ரனாவத் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். நாய்கள் ஜாக்கிரதை என்கிற போர்டை பாத்திருப்போம் இது என்ன கங்கனா ஜாக்கிரதை என போர்டு இருக்கு என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











