அச்சு அசலாய் இந்திரா காந்தியாகவே மாறிய கங்கனா...இதை யாருமே எதிர்பார்க்கலியே
மும்பை :பாலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். சினிமாவில் மட்டுமல்ல சர்ச்சையிலும் இவர் பிரபலம் தான். திறமையான நடிகை என்றாலும் அடிக்கடி ஏதாவது செய்து சர்ச்சையில் சிக்கிக் கொள்ளக் கூடியவர். ஹிருத்திக் ரோஷன் உடனான பிரச்சனை கொஞ்சம் ஓய்ந்ததும் இவர் நடித்த படங்களும் சர்ச்சையாகின.
2019 ம் ஆண்டு மணிகர்னிகா படத்தின் முலம் டைரக்டர் அவதாரம் எடுத்தார் கங்கனா. இதில் ஜான்சிராணி லட்சுமி பாய் ரோலில் நடித்திருந்தார். இவர் நடித்த குதிரையேற்ற சீன் உள்ளிட்டவைகளால் கடுமையான கிண்டலுக்கு ஆளானார்.
பல விதமான சர்ச்சைக்குரிய பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டதால் ட்விட்டர் நிர்வாகமே இவரின் கணக்கை முடக்கும் அளவிற்கு சென்றது. ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதால் இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கிய கங்கனா, தொடர்ந்து அத்துமீறிய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.இப்படி கங்கனா என்றாலே சர்ச்சை என்னும் அளவிற்கு மாறி விட்டார்.

ஜெயலலிதாவாக கலக்கிய கங்கனா
இதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் கங்கனா ஜெயலலிதா ரோலில் நடித்தார். இது ஒரு பக்கம் பாராட்டையும் மறுபக்கம் விமர்சனத்தையும் பெற்றது. இளம் வயது ஜெயலலிதா ரோல் கங்கனாவிற்கு பொருத்தமாக இருந்தாலும், குண்டான உருவம் அவருக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை என விமர்சிக்கப்பட்டது.

படுதோல்வியடைந்த தாகத்
சமீபத்தில் இவர் நடித்த பெண்ணை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான தாகத், மிகப் பெரிய தேல்வி படமாக அமைந்தது. 85 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வெறும் 3 கோடிகளை மட்டுமே பெற்றது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தாகத் மட்டும் தான் உங்கள் கண்ணிற்கு தோல்வி படமாக தெரியுமா என மீடியாக்கள் மீது பாய்ந்தார் கங்கனா.

மீண்டும் டைரக்டரான கங்கனா
இந்நிலையில் கங்கனா மீண்டும் டைரக்டராக தானே இயக்கி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ரோலில் நடித்து வருகிறார். Emergency என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷுட்டிங் இன்று துவங்கப்பட்டுள்ளது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கங்கனா இன்று வெளியிட்டுள்ளார். அதில் அச்சு அசலாக இந்திரா காந்தியாகவே மாறி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் கங்கனா.

க்ளிம்ப்ஸ் வெளியிட்ட கங்கனா
கடந்த மாதம் எமர்ஜென்சி படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற மேக்கப் மேன் மலினோவிஸ்கியுடன் ஆலோசனை நடத்துவது போன்ற போட்டோக்கள், இந்திரா காந்தி ரோலுக்கான் மேக்கப் போட தயாராகும் கிளிம்ப்ஸ் ஆகியவற்றை கங்கனா வெளியிட்டிருந்தார்.எமர்ஜென்சி அரசியல் படமே தவிர, இந்திரா காந்தியின் பயோபிக் கிடையாது என கங்கனா ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

இந்திரா காந்தியாக மாறிய கங்கனா
இந்நிலையில் இன்று, முன்னால் நரைத்த முடி, கையில் கண்ணாடி என அச்சு அசலாக இந்தியா காந்தியாக மாறிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கங்கனா, எமர்ஜென்சி ஃபர்ஸ்ட்லுக்...அதிக சக்திவாய்ந்த, உலக வரலாற்றின் சர்ச்சைக்குரிய பெண்மணியுமாக மாறிய லுக்...எமர்ஜென்சி ஷுட்டிங் ஆரம்பமானது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











