அடுத்த படமாவது ஓடணும் ஆண்டவா.. ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடிய கங்கனா!

சென்னை: தலைவி படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையிலேயே முகாமிட்டுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இன்று காலை ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடி, சாமி தரிசனம் செய்துள்ளார்.

நாடு முழுவதும், நேற்று முன் தினம் மகா சிவராத்திரியை கொண்டாடிய நிலையில், கங்கனா ரனாவத் இன்று ராமேஸ்வரத்தில் சிவனை தரிசித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் எடுக்கப்பட்ட கங்கனா ரனாவத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

ராமேஸ்வரத்தில் கங்கனா

ஏ.எல். விஜய் இயக்கத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். தலைவி படத்திற்காக சென்னையில் முகாமிட்டுள்ள கங்கனா ரனாவத், ஞாயிற்றுக் கிழமையான இன்று ஷூட்டிங் இல்லை என்பதால், அதிகாலையிலேயே ராமேஸ்வரம் சென்று, ஜோதிர் லிங்க சிவனை வழிபட்டுள்ளார்.

புனித நீராடல்

புனித நீராடல்

சிவபெருமானின் கோயில்களில், வடக்கில் காசியை போல, தெற்கில் ராமேஸ்வரம் கோயில் மோட்சத் தளமாக திகழ்கிறது. ராமேஸ்வரத்தில் உள்ள கிணறுகளில் புனித நீராடுவது, சிறப்பான அம்சம் என்பதால், ராமேஸ்வரம் கோயிலுக்கு வழிபட சென்ற கங்கனா ரனாவத் அங்கு, புனித நீராடியுள்ளார்.

மகா சிவராத்திரி

கடந்த பிப்ரவரி 21ம் தேதி மகா சிவராத்திரி நாடு முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயம்புத்தூர் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபட்ட கங்கனா ரனாவத், ஆதியோகி சிலையுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

குழந்தை தத்தெடுப்பு

குழந்தை தத்தெடுப்பு

கங்கனா ரனாவத்தின் தங்கை ரங்கோலி, பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக, சிவராத்திரி அன்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். அதற்கான பேப்பர் ஒர்க் எல்லாம் முடிந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். கங்கனா ரனாவத் அந்த குழந்தைக்கு கங்கா என்ற பெயரையும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஜான்வி கபூரை தொடர்ந்து

தேஜஸ் எனும் படத்தில் பெண் விமானியாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியானது. கரண் ஜோஹர் தயாரிப்பில், சரண் ஷர்மா இயக்கத்தில் ஜான்வி கபூர் நடிப்பில் கஞ்சன் சக்ஸேனா படமும் அதே போன்று பெண் விமானியை மையப்படுத்திய கதை என்பதால், ஜான்வி கபூரை தொடர்ந்து கங்கனாவும் பெண் விமானி கதையை தேர்ந்தெடுத்துள்ளார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது.

கோயில் கோயிலாக

கோயில் கோயிலாக

கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான பங்கா படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. தலைவி படத்தின் டீசரை பார்த்த, பலரும் என்னடா அனிமேஷன் படத்தை எடுத்து வச்சிருக்கீங்க என கலாய்த்துத் தள்ளினர். இந்நிலையில், கங்கனா ரனாவத், கோயில் கோயிலாக சுற்றி வருவது, அடுத்த படமாவது ஓட வேண்டும் என்பதற்காகவா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அப்துல்கலாம் நினைவகம்

ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று, புனித நீராடி சிவனை வழிபட்ட நடிகை கங்கனா ரனாவத், பேக்கரும்பில் கட்டப்பட்டுள்ள, டாக்டர் அப்துல்கலாம் அய்யாவின் தேசிய நினைவகத்திற்கும் சென்றுள்ளார். அதன் புகைப்படங்களையும், கங்கனா ரனாவத்தின் தங்கையான ரங்கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X