தாகத் மட்டும் தான் தோல்விப் படமா...சண்டைக்கு வரும் கங்கனா

மும்பை : 2022 ம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து படுதோல்வி அடைந்து வருகின்றன. அதிகம் எதிர்பார்க்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் இதே நிலை தான்.

Kangana Ranaut wants to know why people are only pointing fingers at her film Dhaakad

குறிப்பாக சமீபத்தில் ரிலீசான கங்கனா ரணாவத்தின் தாகத், அக்ஷய் குமாரின் சாம்ராட் ப்ருத்விராஜ் ஆகியன மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவரை எந்த படமும் பெறாத அளவிற்கு மிக குறைந்த வசுலை பெற்று, பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

அறிமுக இயக்குனரான ரஜ்னீஸ் காய் இயக்கிய ஆக்ஷன் படமான தாகத், ரு.85 கோடி செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படம் வெறும் 4 கோடிக்கும் குறைவான தொகையையே வசுல் செய்துள்ளது. தற்போது இந்த படம் ஜீ 5 ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு உரிமத்தை ஜீ ஸ்டுடியோஸ் தான் பெற்றிருந்தது.

தாகத் படத்தின் தயாரிப்பாளர் தீபக் முகுத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மிகுந்த எதிர்பார்ப்புடன் தாகத் படத்தை நாங்கள் உருவாக்கினோம். படமும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எங்கு தவறு நடந்தது எனக்கு தெரியவில்லை. ஆனால் மக்கள் எதை விரும்புகிறார்கள், எதை விரும்பவில்லை, எதை ஏற்றுக் கொள்கிறார்கள், எதை ஏற்க மறுக்கிறார்கள் என்பது மக்களின் விருப்பம். ஆனால் எங்களை பொருத்த வரை தாகத் ஒரு அற்புதமான பெண்ணை மையப்படுத்திய ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படம். நன்றாக போய் இருக்க வேண்டும் என்றார்.

ஆனால் தாகத் படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தயாரிப்பாளர் தனது சொத்துக்களையும், அலுவலகத்தையும் கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவலை தீபக் முகுத்தும் மறுத்து விட்டார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள கங்கனா, தினமும் காலையில் எழுந்ததும் பார்த்தால் தாகத் ஃபிளாப் என நூறு கட்டுரைகள் வருகிறது. ஆனால் ராதே ஷ்யாம், கங்குபாய் கத்யாவாடி, ஜுக் ஜுக் ஜியோ போன்ற 83 படங்கள் பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்ததை ஒருவர் கூட சொல்வதில்லை.இதற்கு ஏதாவது காரணம் உள்ளதா. உங்களுக்கு தாகத் மட்டும் தான் தோல்வி படமாக தெரியுமா என கோபமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆனால் ஜுக் ஜுக் ஜியோ படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 2 வாரங்களில் 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ஆலியா பட் நடித்த கங்குபாய் படம் பாக்ஸ் ஆபீசில் 120 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் வசூல் நிலவரம் தெரியாமல் கங்கனா, கண்டபடி உளறி வருவதால் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து திட்டி தீர்த்து வருகின்றனர். இதை வைத்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X