அரவிந்த் சாமியுடன் ஏஜிஎஸ் திரையரங்கில் தலைவி படம் பார்த்த கங்கனா ரனாவத்.. வேற லெவல் ரெஸ்பான்ஸ்!
சென்னை: 4 முறை தேசிய விருது வென்றுள்ள நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள தலைவி படத்தின் ப்ரீமியர் ஷோ சென்னை ஏஜிஎஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி உள்ள தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.
இந்நிலையில், இருவரும் அருகருகே அமர்ந்து தலைவி படத்தை பார்த்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தலைவி வருகிறார்
அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை திரையரங்குகளில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, சமுத்திரகனி, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள தலைவி திரைப்படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் ரிலீசுக்கு பின் 4 வாரங்கள் கழித்தே ஒடிடிக்கு படம் செல்வதால் மல்டி பிளக்ஸ் உள்பட அனைத்து தியேட்டர்களிலும் படம் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை.

தலைவர்களுக்கு மரியாதை
தலைவி பட ரிலீசை முன்னிட்டு சென்னைக்கு வந்த நடிகை கங்கனா ரனாவத் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தலைவி பிரஸ்மீட்
அதனை தொடர்ந்து தலைவி பட ரிலீஸ் தொடர்பான பிரஸ் மீட் மற்றும் ஏஜிஎஸ் சினிமாவில் நடைபெற்ற தலைவி பிரீமியர் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடிகை கங்கனா ரனாவத் கலந்து கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

அரவிந்த் சாமி அருகே
சென்னையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் தலைவி திரைப்படத்தின் பிரீமியர் காட்சி பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அப்போது நடிகர் அரவிந்த் சாமி உடன் இணைந்து கங்கனா ரனாவத் அந்த படத்தை பார்த்துள்ளார். இருவரும் பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்து படம் பார்க்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

விஜய்யுடன் லிங்குசாமி
இயக்குநர் ஏ.எல். விஜய் உடன் இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தலைவி பிரீமியர் ஷோவை கண்டு களித்துள்ளனர். படத்திற்கு சினிமா பிரபலங்கள் மத்தியில் நல்லதொரு ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கன்ஃபார்ம் ஹிட்
மறைந்த தமிழக முதல்வரும் முன்னாள் தமிழ் சினிமா நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள நிலையில், நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடையும் என இப்போதே பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தலைவி படம் மீண்டும் தியேட்டருக்கு மக்களை கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய விருது
ஃபேஷன், குயின், தனு வெட்ஸ் மனு, மணிகர்ணிகா மற்றும் பங்கா உள்ளிட்ட படங்களுக்காக நடிகை கங்கனா ரனாவத்துக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ள நிலையில், தலைவி திரைப்படத்திற்காகவும் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய பிராஸ்தெடிக் மேக்கப் கலைஞர்கள் எல்லாம் பணிபுரிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











