600 ரூவா சேலை உடுத்தி, 2 லட்சம் ரூவா ஹேண்ட்பேக் வைத்திருந்த 'தலைவி'

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை விமான நிலையத்தில் பார்த்தவர்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். ஏ.எல். விஜய் இயக்கும் தலைவி படத்திற்காக கங்கனா தனது உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

Kangana Ranaut wears Rs. 600 saree, carries Rs. 2 lakh bag

இந்நிலையில் அவர் கொல்கத்தாவில் ரூ. 600க்கு வாங்கிய ஆர்கானிக் காட்டன் புடவையை அணிந்து கொண்டு ஜெய்பூர் கிளம்பினார். ஆர்கானிக் காட்டன் புடவையின் விலை வெறும் 600 ரூபாய் தானா என்று கங்கனா வியந்துவிட்டாராம். ஆனால் விமான நிலையத்தில் அவரை பார்த்தவர்களும் வியந்தனர். காரணம் அவர் கையில் இருந்த பேக்.

600 ரூபாய்க்கு சேலை அணிந்திருந்த கங்கனா கையில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிராடா(Prada) பேக் வைத்திருந்தார். பாலிவுட் பிரபலங்கள் இப்படி லட்சக் கணக்கில் செலவு செய்து ஹேண்ட்பேக் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஹேண்ட்பேக் மட்டும் அல்ல ஷூ கூட 2 , 3 லட்சங்களுக்கு வாங்குகிறார்கள். விமான நிலையத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுக்கவே பிரபலங்கள் இப்படி விலை உயர்ந்தவற்றுடன் வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக டியர் காம்ரேட் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்பை சென்ற விஜய் தேவரகொண்டா விமான நிலையத்தில் புகைப்படக் கலைஞர்களிடம் சிக்கியபோது இது என்னடா தலைவலி என்று கேட்டார். விஜய் கூறியதை கேட்ட புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. பாலிவுட் பிரபலங்களை போன்று விமான நிலையத்தில் நின்று கொண்டு வகை, வகையாக போஸ் கொடுக்க விஜய் விரும்பாதது பெரிய விஷயமாக பேசப்பட்டது.

பாலிவுட்டில் கங்கனாவின் பெயரை சொன்னாலே அய்யோ, அந்த நடிகையா, அவர் பிரச்சனை பார்ட்டியாச்சே என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. கங்கனா சும்மா இருந்தாலும் அவரின் அக்கா ரங்கோலி ட்விட்டரில் அவ்வப்போது யாரையாவது வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X