கர்ணி சேனா பாதுகாப்புடன்.. மும்பை வரும் கங்கனா ரனாவத்.. டிரெண்டாகும் "Welcome to Mumbai"
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் மகாராஷ்ட்ரா அரசையும் குற்றம்சாட்டி உள்ள நடிகை கங்கனா ரனாவத், மும்பை வருவதை முன்னிட்டு, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஹிமாச்சல் பிரதேசத்தின் மினாலியில் குடும்பத்தினருடன் இந்த லாக்டவுனில் வசித்து வந்த நடிகை கங்கனா ரனாவத், இன்று மும்பை வர உள்ளார்.

ஒய் பிரிவு பாதுகாப்பு
மும்பை வரும் நடிகை கங்கனா ரனாவத்தின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற பேச்சுக்கள் அடிபட்டதால், அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடிகருக்கும் வழங்கப்படாத அளவுக்கு 11 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் நடிகை கங்கனா ரனாவத்தை பாதுகாத்து வருகின்றனர்.

கிளம்பியாச்சு
ஹிமாச்சல் பிரதேசத்தில் கோயில் ஒன்றில் வழிபட்டு விட்டு, மும்பை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளார். மகாராஷ்ட்ரா தான் தன்னை உருவாக்கியது என்றும், அங்கு செல்வதில் தனக்கு எந்த பயமும் இல்லை என்றும் கூறியுள்ளார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கர்ணி சேனா
கர்ணி சேனா அமைப்பினர், மும்பை விமான நிலையத்தில் இருந்து கங்கனா ரனாவத்துக்கு பாதுகாப்பு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். ஹிமாச்சலில் இருந்து மும்பை வரும் கங்கனா ரனாவத் ஹோம் குவாரண்டைனில் இருக்க வேண்டும் என மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.

கொரோனா சோதனை
இரு முறை நடிகை கங்கனா ரனாவத்துக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளும், நெகட்டிவ் என்றே வந்த நிலையில், துணிச்சலுடன் இன்று மும்பைக்கு விசிட் அடிக்க உள்ளார் கங்கனா ரனாவத். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிபிஐ விசாரணை மற்றும் பாலிவுட்டில் புழங்கும் போதைப் பொருள் குறித்தும் கங்கனா பல விஷயங்களை போட்டு உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பைக்கு வரவேற்கிறோம்
நடிகை கங்கனா ரனாவத், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும், துணிச்சலோடு மும்பை வர உள்ள நிலையில், பாலிவுட் ரசிகர்கள் "Welcome to Mumbai" என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நடிகை கங்கனா ரனாவத்தை வரவேற்று வருகின்றனர். கங்கனா ரனாவத் ரியல் லைஃப் ஜான்சி ராணி என்றும் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











