ரத்தமும் சதையுமான கேரக்டர் அது.. 'தலைவி'யில் நடித்தது பற்றி நடிகை கங்கனா நெகிழ்ச்சி!

By

சென்னை: யாருக்கும் கிடைக்காத ரத்தமும் சதையுமான கேரக்டர் தலைவியில் எனக்கு கிடைத்திருக்கிறது என நடிகை கங்கனா கூறியுள்ளார்.

Recommended Video

சென்னை: தலைவியின் இறுதிநாள் ஷூட்டிங்.. போட்டோ போட்ட எம்ஜிஆர் அரவிந்த்சாமி..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை 'தலைவி' என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டு வருகிறது.

விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, கங்கனா ரனவத் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜி.வி.பிரகாஷ்குமார்

எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இந்தப் படத்தை கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். இதுபற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான, பிருந்தா பிரசாத் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை.

படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு

இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. ஐதராபாத்தில் செட் அமைத்து இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகை கங்கனா ரனவத் தெரிவித்துள்ளார்.

ரத்தமும் சதையுமான

ரத்தமும் சதையுமான

இதுபற்றி ட்விட்டரில், அவர் கூறியிருப்பதாவது: வெற்றிகரமாக, எங்கள் கனவுத் திரைப்படமான தலைவி ஷூட்டிங்கை முடித்துவிட்டோம். எந்த நடிகைக்கும் எளிதில் கிடைத்திடாத, அரிதான ரத்தமும் சதையுமான கேரக்டர் எனக்கு கிடைத்தது. நான் அதிகம் விரும்பி நடித்தேன்.

கலவை உணர்ச்சி

கலவை உணர்ச்சி

அதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கலவையான உணர்ச்சிகள் மேலிடுகின்றன. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு. 'தலைவி' படக்குழுவினருக்கு நன்றி". இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X