13 இடத்தில் கட்.. எமர்ஜென்சி முட்டுக்கட்டை போடும் சென்சார் போர்டு.. அதிருப்தியில் கங்கனா!

சென்னை: நடிகை கங்கனாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'எமர்ஜென்சி’ இந்தி திரைப்படம் செப்டம்பர் 6ந் தேதி திரையரங்கில் வெளியாக, சென்சார் போர்ட் சான்றிதழ் வழங்காததால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, தணிக்கை குழு படத்தில் 13 இடங்களில் கட் சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கங்கனா ரனாவத் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை கங்கனா ரனாவத் கடந்த 2006ம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி ஆனார். இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கங்கனா ரனாவத் பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ராகவா லாரன்சுடன் இணைந்து சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

kangana ranaut emergency sensor board certificate

எமர்ஜென்சி: தற்போது கங்கனா எமர்ஜென்சி படத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகை கங்கனாவே எழுதி இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் செப்டம்பர் 6ந் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், சென்சார் போர்டு சான்றிதழ் கொடுக்காததால் படம் வெளியாவது தாமதமாகி வருகிறது.

13 இடத்தில் கட்: இதைத்தொடர்ந்து, கங்கனா ரனாவத் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்சார் போர்ட் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், எமர்ஜென்சி படத்தில் 13 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், படத்தில் சீக்கியர்கள் அல்லாதவர்களை சீக்கியர்கள் துப்பாக்கியால் சுடுவது,சஞ்சய் காந்தி மற்றும் ஜெயில் சிங் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், மூன்று இடங்களில் திருத்தம் செய்யவும், 6 இடங்களில் புதிதாக சேர்க்கவும் கூறியிருக்கிறோம். இதனை செய்து முடித்தால் எமர்ஜென்சி படத்திற்கு யு ஏ சான்றிதழ் கொடுக்கப்படும் என சொல்லப்பட்டது.

கடும் அதிருப்தியில் கங்கனா: இதுகுறித்து பேசிய கங்கனா, சென்சார் போர்டு தெரிவித்த சில பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. அவர்கள் சொல்லும் சில திருத்தங்களை செய்தால், அது நம்பகத் அற்றதாக ஆகிவிடும் என்று கூறியுள்ளர். மேலும், இந்த படத்திற்காக நாங்கள் போராட்டத் தயாராக இருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார். எமர்ஜென்சி படம் வெளியாவது தாமதமாகி வருவதால், அதனால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க முடியாமல், நடிகை கங்கனா, மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டை விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X