Just In
- 33 min ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 1 hr ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 2 hrs ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Don't Miss!
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- News
எல்லாத்துக்கும் கருத்து சொல்லுவோம்...டுவிட்டரில் கலக்கும் அரசியல் தலைகள்
- Education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்? அமைச்சர் விளக்கம்!!
- Automobiles
தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'எனது உடல் அதற்கு செட்டாகவில்லை'... ஜான்சி ராணி படம் பற்றி கங்கனா ரனாவத்!

சென்னை: ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க தனது உடல் உகந்ததாக இல்லை என நடிகை கங்கனா ரனாவத் கூறினார்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் "மணிகர்னிகா - ஜான்சியின் ராணி". ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.
அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மணிகர்னிகா படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

நாயகி கங்கனா ரனாவத்
இந்நிகழ்ச்சியில் பேசிய நாயகி கங்கனா ரனாவத், "தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம். 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது. இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒல்லியாக இருந்தேன்
இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார்.

தினமும் ஆக்ஷன் காட்சிகள்
தினமும் 10-12 மணி நேரம் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது. ஆக்ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன. அதன் பிறகு தான் நான் படத்தை இயக்கினேன்.

இயக்குனரான கங்கனா
நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். நான் நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்திருக்கிறேன், அது எனக்கு உதவிகரமாக இருந்தது. காட்சிகளை படம் பிடிப்பது எளிதாக இருந்தது, ஆனால், என்ன காட்சிகளை எடுக்க வேண்டும், அதற்கு தயாராவது தான் சவாலாக இருந்தது.

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்
அதே போல ராணி லக்ஷ்மி பாய் கதாப்பாத்திரம் நாம் நடிக்கும் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் போன்றது அல்ல. அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன்", என அவர் கூறினார்.
2018ம் ஆண்டின் சூப்பர் "ஸ்டார்ஸ்" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க!