twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மும்பை வந்தார் கங்கனா ரனாவத்.. விதிமீறல் கட்டிடத்தை இடிப்பதை நிறுத்த மும்பை கோர்ட் உத்தரவு!

    |

    மும்பை: நடிகை கங்கனா ரனாவத், சிவ சேனா கட்சியினருக்கு சவால் விட்ட நிலையில், மும்பை வந்து இறங்கினார்.

    கடந்த 6 மாத காலமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    பாலிவுட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாகவும், போதைப் பொருள் மாஃபியா குறித்தும் வெளிப்படையாக பேசி வந்தார்.

     அடுத்த முதல்வர் கங்கனாதான் போல.. நீங்கெல்லாம் மூட்டைய கட்டவேண்யதுதான்.. ராம்கோபால் வர்மா லந்து! அடுத்த முதல்வர் கங்கனாதான் போல.. நீங்கெல்லாம் மூட்டைய கட்டவேண்யதுதான்.. ராம்கோபால் வர்மா லந்து!

    மும்பை வந்தார்

    மும்பை வந்தார்

    மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா கட்சியினரை பகிரங்கமாக குற்றம்சாட்டி வந்த நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்ற தகவல்கள் பரபரப்பை கிளப்பின. என்ன நடந்தாலும், மும்பைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என சவால் விட்ட கங்கனா ரனாவத் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

    சிவசேனா அமைப்பினர் போராட்டம்

    சிவசேனா அமைப்பினர் போராட்டம்

    நடிகை கங்கனா ரனாவத் மும்பை வருவதை எதிர்த்து, அவரது உருவப் படங்கள் எரிக்கப்பட்டும், செருப்பு, துடைப்பம் உள்ளிட்டவற்றால் அடிக்கப்பட்டும், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மும்பை விமான நிலையத்தின் அருகே போராட்டங்களை நடத்தினர்.

    ஆயிரக் கணக்கில்

    ஆயிரக் கணக்கில்

    கங்கனா ரனாவத்தின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக அவரை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த கர்ணி சேனா அமைப்பினர், ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து நடிகை கங்கனா ரனாவத், அவரது வீட்டுக்கு செல்லும் வரை வழி நெடுகும் பாதுகாப்பு அரணாக இருந்து வந்தனர்.

    கட்டிடம் இடிப்பு

    கட்டிடம் இடிப்பு

    கங்கனா ரனாவத் மும்பைக்கு வருவதை எதிர்க்கும் விதமாக, மும்பை, பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் அலுவலகத்தை மும்பை நகராட்சி அதிகாரிகள் இன்று காலை முதலே இடிக்கத் துவங்கினர். அதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நடிகை கங்கனா ரனாவத் தொடுத்த வழக்கும் இன்று மதியம் 12.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

    இடிக்காதீங்க

    இடிக்காதீங்க

    வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடிக்கும் பணியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இடத்துக்கு உரிமையானவர் ஊரில் இல்லாத போது, எப்படி இடிக்கலாம் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். 7 நாட்கள் கெடு கொடுத்து புதிய நோட்டீஸ் ஒன்றையும் மும்பை மாநகராட்சி ஒட்டியிருக்கிறது.

    இடிபட்ட கட்டங்களின் வீடியோ

    இடிபட்ட கட்டங்களின் வீடியோ

    மும்பை வந்த கங்கனா ரனாவத், தனது பாலி அலுவலகத்தை பார்வையிட்டார். அங்கே அவர் எடுத்த இடிக்கப்பட்ட கட்டடங்களின் வீடியோ காட்சிகளை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஜனநாயக படுகொலை என பதிவிட்டுள்ளார். முன்னதாக தனது கட்டடம் முறைகேடாக கட்டவில்லை என்றும், மும்பை குட்டி பாகிஸ்தானாக மாறி விட்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

    English summary
    Kanagana Ranaut arrives Mumbai today. Several Shiv Sena party members protest against her and Karni Sena member protect her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X