விவகாரம் பெருசாகுது.. போதைப் பொருள் சர்ச்சை.. ரன்வீர், ரன்பீரை இழுத்து விடும் கங்கனா ரனாவத்!

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு இப்போ, பாலிவுட்டில் புழங்கும் போதைப் பொருள் மாஃபியா வரை பூதாகரம் ஆகி உள்ளது.

Recommended Video

Dilbechara overtakes Bahubali box office Collection

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் ஆரம்பத்தில் இருந்தே நெப்போடிசம் பிரச்சனையை கையில் எடுத்து வந்த நடிகை கங்கனா ரனாவத், தற்போது போதைப் பொருள் புழக்கத்தையும் கையில் எடுத்துள்ளார்.

மேலும், முன்னணி நடிகர்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூ, விக்கி கவுஷிக், அயன் முகர்ஜி உள்ளிட்டோர் தங்கள் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய முன் வரவேண்டும் என பகிரங்கமாக ட்வீட் போட்டுள்ளார்.

முக்கிய குற்றவாளி

முக்கிய குற்றவாளி

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தான் பாலிவுட் மாஃபியாவின் முக்கிய குற்றவாளியே என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார் நடிகை கங்கனா ரனாவது. பிரதமர் மோடிக்கு அந்த ட்வீட்டை டேக் செய்து, பாலிவுட்டில் நிலவும் பல பிரச்சனைகளுக்கு அவர் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.

99 சதவீதம் பேர்

99 சதவீதம் பேர்

மேலும், பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் தான் மிகவும் விலை உயர்ந்த போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றும், பாலிவுட் பார்ட்டிகளில் போதை மருந்து புழக்கம் சர்வ சாதாரணமான ஒன்று என்றும், 99 சதவீதம் ஸ்டார் நடிகர்கள் போதைக்கு அடிமையானவர்கள் அவர்களை இனம் காண வேண்டும் என அதிரடியாக மற்றொரு குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.

ரவீனா டாண்டன் எதிர்ப்பு

ரவீனா டாண்டன் எதிர்ப்பு

நீங்க சொல்றது எப்படி இருக்கு தெரியுமா கங்கனா, உலகத்தில் 99 சதவீதம் நீதிபதிகள், அரசியல்வாதிகள், சாமியார்கள், அதிகாரிகள், போலீஸ்காரர்கள் கரப்ட் ஆனவர்கள் என்பது போல பொதுப்படையாய் உள்ளது என்றும், சில கெட்ட ஆப்பிள்களினால் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் கெட்டு விடாது என்று பதிலடி கொடுத்திருந்தார்.

ரன்வீர், ரன்பீரை இழுத்து விடும் கங்கனா

ரன்வீர், ரன்பீரை இழுத்து விடும் கங்கனா

இந்நிலையில், தற்போது நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம் என்பது வதந்தி என்கின்றனர். முன்னணி நடிகர்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி மற்றும் விக்கி கவுஷிக் ஆகியோர் தாங்களாகவே முன் வந்து உங்கள் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி, போதைக்கு அடிமையானவர்கள் நீங்கள் என்று பரப்பப்படும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என கோர்த்து விட்டுள்ளார்.

தேசிய விருது கொடுப்பதற்கு முன்

தேசிய விருது கொடுப்பதற்கு முன்

மேலும், பாலிவுட் நடிகர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அவர்களுக்கு நிச்சயம் போதை மருந்து பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும், போதைப் பழக்கம் கொண்ட நடிகர்கள் எப்படி 140 கோடி மக்களுக்கும், இந்திய தேசத்தின் இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக இருப்பார்கள் என்றும் விளாசி தள்ளி உள்ளார்.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆதரவும் எதிர்ப்பும்

கங்கனா ரனாவத் இப்படியொரு குண்டை தூக்கிப் போட்டுள்ள நிலையில், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் ரசிகர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஏன், முன்னணி நடிகர்களின் பெயர்களை சொல்ல உங்களுக்கு பயமா? என்றும் அவர்கள் போதைப் பொருள் எடுத்துக் கொள்ளும் போது நேரில் பார்த்தீங்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் கங்கனாவிற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X