'அவர் நடிக்க இருந்த படத்தை உடனடியாக மறுத்தேன்' பி.சி.ஶ்ரீராம் ட்வீட்.. கங்கனா திடுக் ரிப்ளை!

By

சென்னை: கங்கனா நடிக்க இருந்த பட வாய்ப்பை மறுத்தேன் என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் தெரிவித்த கருத்துக்கு நடிகை கங்கனா பதிலளித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து, பாலிவுட்டை கடுமையாக சாடி வருகிறார் இந்தி நடிகை நடிகை கங்கனா ரனவத்.

இவர், தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர். இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார்.

சிறையில் இருப்பார்கள்

சிறையில் இருப்பார்கள்

முதலில் சினிமா வாரிசு நடிகர், நடிகைகள் பற்றி விளாசிய கங்கனா, கரண் ஜோஹர், மகேஷ்பட் உள்பட சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை கடுமையாக சாடினார். அவர்கள் பாலிவுட் மாஃபியா என்றும் கூறி இருந்தார். பிறகு பாலிவுட்டில் போதை மருந்துகள் இல்லாமல் பார்ட்டிகள் இல்லை என்றும் சில நடிகர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டால் சிறையில் இருப்பார்கள் என்றும் கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

இதையடுத்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா ரனவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக ட்விட்டரில் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறியதற்கு கங்கனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

ஒய் பிளஸ் பாதுகாப்பு

ஒய் பிளஸ் பாதுகாப்பு

இல்லை என்றால் அவர் மும்பைக்கு வரக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவர், மும்பைக்கு வந்தால் கங்கனா மீது தேச அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று மிரட்டல் விடுத்தார். அதற்கு கங்கனா, 9- ஆம் தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று சவால் விட்டார். இதற்கிடையே அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

ஒப்புக் கொள்ளவில்லை

ஒப்புக் கொள்ளவில்லை

இதற்கிடையே, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், 'கங்கனா நடிக்க இருந்த இந்தி படத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அசவுகரியமான நிலையை உணர்ந்ததால், அதை அவர்களிடம் சொன்னேன். புரிந்து கொண்டார்கள். சில நேரங்களில், மனதில் எது சரியென படுகிறதோ அதுவே முக்கியம். அந்தப்படக் குழுவுக்கு வாழ்த்துகள் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்..

Recommended Video

Sushant இறப்பை பயன்படுத்தும் Kangana • Tapsee Strong Reply
வாய்ப்பை இழந்துவிட்டேன்

வாய்ப்பை இழந்துவிட்டேன்

இது வைரலாக பரவியது. இந்நிலையில் நடிகை கங்கனா இதற்கு பதிலளித்துள்ளார். அவர், 'உங்களைப் போன்ற லெஜண்ட்களுடன் பணிபுரியும் வாய்ப்பை இழந்துவிட்டேன். இது முற்றிலும் எனக்கு இழப்பு. உங்களுக்கு அசவுகரியமான எண்ணம் தோன்ற என்ன காரணம் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சரியான முடிவை எடுத்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X