16 வயது சிறுவனை பலாத்காரம் செய்த பிரபல நடிகையின் ஹேர்ஸ்டைலிஸ்ட் கைது
மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ஹேர்ஸ்டைலிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ஹேர்ஸ்டைலிஸ்ட் (சிகை அலங்கார நிபுணர்) பிரென்டன் ஆலிஸ்டர் டீ ஜீ(42). தென்னாப்பிரிக்காவில் வேலை பார்த்த அவர் தற்போது பாலிவுட்டில் பிரபலமானவர்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி பிரபலங்களின் ஹேர்ஸ்டைலிஸ்டாக உள்ளார்.

கைது
டேட்டிங் ஆப் ஒன்றில் 16 வயது சிறுவன் தனக்கு 18 வயது என்று பொய் சொல்லி கணக்கு துவங்கியுள்ளான். அந்த ஆப் மூலம் பிரென்டனுக்கு சிறுவனின் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்நிலையில் பிரென்டன் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரென்டனை கைது செய்துள்ளனர்.

படக்குழு
கங்கனா ரனாவத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. பலாத்கார வழக்கில் பிரென்டன் கைது செய்யப்பட்டதை பார்த்த படக்குழு அதிர்ச்சி அடைந்தது. போக்சோ வழக்கில் பிரென்டனை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

போலீஸ்
அந்த சிறுவன் கடந்த 2017ம் ஆண்டு டேட்டிங் ஆப்பை டவுன்லோடு செய்துள்ளார். தனக்கு 18 வயது என்று பொய் சொல்லி தன்னுடன் உறவு கொள்ளுமாறு 30 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் 15 ஆண்களை அவர் நேரில் சந்தித்துள்ளார். கடந்த மே மாதம் ஆப் குறித்தும், பலாத்கார சம்பவம் குறித்தும் சிறுவனின் தாய்க்கு தெரிய வந்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

காவல்
கைது செய்யப்பட்ட பிரென்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மும்பை மற்றும் கோவாவில் வேலை செய்து வந்த பிரென்டனின் கைது சம்வம் பாலிவுட் பிரபலங்களை அதிர வைத்துள்ளது. கங்கனா ரனாவத் தற்போது மணிகர்னிகா படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











