அப்போது என்னை போதைக்கு அடிமைப்படுத்தியது அந்த பிரபல நடிகர்தான்.. நடிகை கங்கனா பரபரப்பு புகார்!
மும்பை: தன்னை போதைக்கு அடிமைப்படுத்தியது யார் என்பதை நடிகை கங்கனா ரனவத் தெரிவித்துள்ளார்.
தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர், இந்தி நடிகை கங்கனா ரனவத். இப்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார்.
இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதுகளை பெற்றவர் இவர்.

போதை பொருள்
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பரபரப்பு தகவல்களை தெரிவித்து வருகிறார். பாலிவுட் பிரபலங்களை தொடர்ந்து சாடி வரும் அவர், நெபோடிசம் பற்றியும் பேசி வருகிறார். இந்நிலையில் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ், வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இப்போது பாலிவுட்டில் நிலவும் போதை பொருள் குறித்து அதிரடியாக பேசி உள்ளார்.

மைனராக இருந்தபோது
'பாலிவுட்டில் பிரபலமான போதைப்பொருள் கொக்கைன். கிட்டத்தட்ட வீடுகளில் நடக்கும் அனைத்து பார்ட்டிகளிலும் இது தாராளம். அது விலையுயர்ந்த போதைப்பொருள். ஆனால், பார்ட்டிகளுக்கு முதன் முதலாக செல்பவர்களுக்கு இலவசமாகவே கொடுப்பார்கள். நான் மைனராக இருந்தபோது, என் வழிகாட்டியாக இருந்தவர் குளிர்பானங்களில் போதைப் பொருள் கலந்து தனக்கு கொடுத்து விடுவார் என்று கூறியிருந்தார்.

குணசித்திர நடிகர்
இந்நிலையில் தனக்கு போதைப் பொருளை கொடுத்து அடிமைப்படுத்தியது பிரபல குணசித்திர நடிகர்தான் என்று இப்போது தெரிவித்துள்ளார், கங்கனா. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த காலம் அது. மும்பையில் சில காலம் ஹாஸ்டலில் இருந்தேன். பிறகு 'ஆண்டி' ஒருவருடன் தங்கினேன்.

நெருக்கம் அதிகரித்தது
அப்போதுதான் அந்த குணசித்திர நடிகர் அறிமுகமானார். சினிமா வாய்ப்புக்கு உதவுவதாகச் சொன்னார். பிறகு அவர் எனது வழிகாட்டி என்று சொல்லிகொண்டார். பிறகு என்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பது போல நடத்தினர். பார்ட்டிகளுக்கு அழைத்து சென்றார். அதில் போதையை உணர்ந்ததும் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்தது.

தாங்க முடியவில்லை
பிறகு இது விருப்பத்துடன் நடக்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆனால், என் போதை அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த நெருக்கத்துக்குப் பிறகு அவராக, என் கணவர் என்று சொல்லிக் கொண்டார். பிறகு எனக்கு, அனுராக் பாசு இயக்கிய 'கேங்க்ஸ்டர்' பட வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததும் அவரால் தாங்க முடியவில்லை.

மயக்கத் தொடங்கினார்
இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என குடித்துவிட்டு சொல்லத் தொடங்கினார். பிறகு போதை ஊசி மூலம் என்னை மயக்கத் தொடங்கினார். இதனால் படப்பிடிப்புக்கு ஒழுங்காகச் செல்ல முடியவில்லை. இதை இயக்குனர் அனுராக் பாசுவிடம் சொன்னேன். அவர் என்னைப் பாதுகாக்க அவருடைய அலுவலகத்தில் என்னை தங்க வைத்தார். இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











