பயோபிக் இல்லையாம்.. அரசியல் படத்தில் இந்திரா காந்தி ஆகிறார் நடிகை கங்கனா ரனாவத்!
மும்பை: அரசியல் வரலாற்று படத்தில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருக்கிறார்.
Recommended Video

பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத். இவர், தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமார்
இதில், எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

கொரோனா காரணமாக
இந்தப் படத்தை கடந்த வருடம் ஜூன் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். கொரோனா அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தொடங்கிய இதன் ஷூட்டிங் இப்போது நிறைவடைந்து விட்டது. இதை நடிகை கங்கனா தெரிவித்திருந்தார்.

விரும்பி நடித்தேன்
இதுபற்றி அவர், எங்கள் கனவுத் திரைப்படமான தலைவி ஷூட்டிங்கை முடித்துவிட்டோம். எந்த நடிகைக்கும் எளிதில் கிடைத்திடாத, அரிதான ரத்தமும் சதையுமான கேரக்டர் எனக்கு கிடைத்தது. நான் அதிகம் விரும்பி நடித்தேன் என்று கூறியிருந்தார். இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

இந்திரா காந்தி
இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார் கங்கனா ரனாவத். 'இந்திரா காந்தி வேடத்தில் நான் நடிக்க இருக்கும் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கம் நடைபெற்று வருகிறது. இது பயோபிக் படம் அல்ல. அரசியல் வரலாற்றுப் படம். பல முக்கியமான நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள்.

ரிவால்வர் ராணி
இந்திய அரசியலின் முக்கிய தலைவரின் வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஒரு புத்தகத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்படுகிறது என்று கங்கனா தெரிவித்துள்ளார். ஆனால், யார் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் படம் உருவாகுகிறது என்ற தகவலை தெரிவிக்கவில்லை. ரிவால்வர் ராணி படத்தில் கங்கனாவுடன் இணைந்து பணியாற்றிய சாய் கபீர், இதை இயக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











