சுஷாந்த், சாரா விவகாரத்தில் தன் காதல் கதையை சொன்ன பிரபல நடிகை.. விளாசித் தள்ளிய நெட்டிசன்ஸ்!

By

மும்பை: தனது முன்னாள் காதல் குறித்து சொன்ன பிரபல நடிகையை ரசிகர்கள் விளாசித் தள்ளியுள்ளனர்.

Recommended Video

Sushant இறப்பை பயன்படுத்தும் Kangana • Tapsee Strong Reply

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து இந்தி சினிமாவில் நெபோடிசன் பற்றிய பேச்சு தொடங்கியுள்ளது.

வாரிசு நடிகர்கள், அவர்கள் இல்லாத அவுட்சைடர்கள் பற்றி காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

சோனாக்‌ஷி சின்ஹா

சோனாக்‌ஷி சின்ஹா

திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைதளங்களுக்கே சென்று ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து, அவர்களை கடுமையாக விளாசினர். இதனால் சோனாக்‌ஷி சின்ஹா உட்பட சில நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகினர்.

நடிகை சாரா அலிகான்

நடிகை சாரா அலிகான்

பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை நடிகை கங்கனா ரனவத்தும் தொடர்ந்து விளாசி வருகிறார். தினமும் ஏதாவது பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வரும் கங்கனா நேற்றும் ஒரு பதிவிட்டிருந்தார். 2018-ஆம் ஆண்டு வெளியான கேதர்நாத் படத்தில் நடித்தபோது சுஷாந்த் சிங்கும் அதில் அறிமுகமான சாரா அலி கானும் காதலித்து வந்ததாகவும், பின்னர் சாரா, காதலை முறித்துக் கொண்டதாகவும் சுஷாந்த் நண்பர் சாமுவேல் கூறியிருந்தார்.

நடிகை கங்கனா

நடிகை கங்கனா

இந்த செய்தி பாலிவுட்டில் பரபரப்பானது. இதுகுறித்து சாரா அலிகானிடமும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர். இதுகுறித்து நடிகை கங்கனா கூறும்போது, சுஷாந்த் மற்றும் சாரா அலிகானின் காதல் செய்தி அப்போதே மீடியாவில் வெளியானது. படப்பிடிப்பில், வெளிப்படையாக ஒரே அறையை இருவரும் பகிர்ந்துள்ளனர். இந்த ஆடம்பரமான நெபோடிச குழந்தைகள், அவுட்சைடர்களுக்கு ஆசை காட்டி ஏன் பகிரங்கமாக பறித்துக்கொள்கிறார்கள்?

பைத்தியமாக இருந்தனர்

பைத்தியமாக இருந்தனர்

பிறகு சுஷாந்த், ஒரு பிணந்தின்னி கழுகிடம் மாட்டிக் கொண்டார் என்பதில் ஆச்சர்யமில்லை என்று தெரிவித்திருந்தார். அவர் கழுகு என்று சொன்னதை ரியாவை என நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர். கங்கனாவின் இந்தப் பதிவுக்கு ஒரு நெட்டிசன், 'கேதர்நாத் பட புரமோஷனின் போது இருவரும் பைத்தியமாக இருந்தனர். திடீரென சாரா, சுஷாந்தை தூக்கி எறிந்ததும் இன்ஸ்டாவில் அவருடன் இருந்த போட்டோவை எல்லாம் நீக்கினார் சுஷாந்த். மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டார் என்று கூறியிருந்தார்.

உண்மையாக காதலித்தேன்

உண்மையாக காதலித்தேன்

இதற்கு நடிகை கங்கனா பதிலளித்தார். அப்போது, 'சாரா அவரை காதலித்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஒரு பெண் உண்மையாகக் காதலிக்கிறாளா இல்லையா என்பதை அறியாத முட்டாள் இல்லை சுஷாந்த். சாராவுக்கு அழுத்தம் ஏறப்பட்டிருக்கும். நானும் ஹிருத்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் இப்போது ஏன் ஒரு எதிரியைப் போல நடந்து கொள்கிறார் என்பது புதிராக உள்ளது என்று தெரிவித்தார்.

பெயரை இழுக்காதிர்கள்

பெயரை இழுக்காதிர்கள்

நடிகை கங்கனாவின் இந்தப் பதிவால் கடுப்பான ஹிருத்திக் ரோஷன் ரசிகர்கள், அவரை கடுமையாக விளாசினர். ஒருவர், முதல்ல உங்க கற்பனை உலகத்துல இருந்து வெளியில வாங்க. மற்ற நடிகர்கள் பெயரைச் சொல்லாமல் உங்கள் கருத்தை நிரூபிக்க முயலுங்கள். குறிப்பாக ஹிருத்திக் பெயரை இழுக்காதிர்கள்' என்று கூறியுள்ளார். இதே போல பலர் அவரை கண்டபடி விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X