மீண்டும் மோடி பிரதமரானால் தான் நாடு உருப்படும்! ஜெயம் ரவி பட நடிகை அதிரடி!

மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டுமென நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தில் பிறந்து இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை கங்கனா ரனாவத். பல்வேறு இந்திப் படங்களில் நடித்து பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

பிரபல இயக்குனர் மாதுர் பந்தர்கரின் ஃபேஷன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது கிடைத்தது. இவர் ஜெயம் ரவியுடன் தமிழில் தாம் தூம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது ராணி லஷ்மிபாய் கதாபாத்திரத்தில் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சலோ ஜீத்தே ஹேய்ன்

சலோ ஜீத்தே ஹேய்ன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய வயது வாழ்க்கையை சித்தரிக்கும் குறும்படமான சலோ ஜீத்தே ஹெய்ன் திரைப்படத்தை கங்கனா கண்டு ரசித்தார்.

மோடி படம் அல்ல

மோடி படம் அல்ல

அதன்பிறகு பேசிய கங்கனா, இந்தப்படம் மோடியைப் பற்றிய படம் அல்ல. இது நம் ஒவ்வொருவரைப் பற்றிய படம். இந்த சமுதாயத்தின் வளர்ச்சியில் நம்முடைய பங்கு என்ன என்பதை காட்டும் படம் எனக் குறிப்பிட்டார்.

சரியானவர் மோடி

சரியானவர் மோடி

அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு ஆண்டு ஆட்சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்கனா, இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மோடி தான் சரியான ஆள் எனக் கூறினார். மேலும், அவர் பெற்றோரால் இந்த அளவுக்கு முன்னேறவில்லை எனவும், தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னேறி இன்று பிரதமர் பதவியை அலங்கரித்து வருகிறார். ஜனநாயகத்தின் மிகச் சிறந்த தலைவர் மோடி தான் எனக் கூறினார்.

ஐந்து ஆண்டுகள் போதாது

ஐந்து ஆண்டுகள் போதாது

மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமா எனக் கேட்கப்பட்டதற்கு.., "ஏன் கூடாது? நிச்சயமாக அவர் தான் வர வேண்டும். நம் நாடு பாதாளக் குழியில் விழுந்து கிடக்கிறது. அதை மீட்பதற்கு ஐந்து ஆண்டுகள் போதாது. அதனால் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X