கங்கனாவை துரத்தும் சர்ச்சைகள்... சட்ட சிக்கலிலும் சிக்கினார் சர்ச்சை நாயகி
கொல்கத்தா: அடிக்கடி ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது கங்கனாவிற்கு புதிதல்ல. பத்திரிக்கையாளர் சந்திப்பு, ட்விட்டர் பதிவு என்ற இவர் போகும் இடமெல்லாம் சர்ச்சைக்கும், பரபரப்பிற்கும் பஞ்மில்லாமல் போய் விட்டது.
சினிமாவில் முன்னணி நடிகையாகவும், துணிச்சலான நடிகையாகவும் இருக்கும் கங்கனா ரணாவத், ஹிருத்திக் ரோஷன் உடனான விவகாரத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல சிக்கல்களில் சிக்கி வருகிறார். விதிகளை மீறி சர்ச்சை கருத்து பதிவிட்டதாக சமீபத்தில் தான் அவரது ட்விட்டர் கணக்கை, ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது.

கொரோனா பாதித்த கங்கனா
இந்த விவகாரம் அடங்குவதற்குள் தனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், இதனால் சோதனை செய்ததில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் கங்கனா. தற்போது வீட்டில் தான் தனிமையில் இருந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

கொல்கத்தா போலீசில் புகார்
இந்நிலையில் லேட்டஸ்டாக, கங்கனா மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் உள்ள உல்டடங்கா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத கலவரங்களை தூண்ட கங்கனா முயற்சி செய்வதாக கூறி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரிஜு தத்தா புகார் அளித்துள்ளார். மேற்குவங்க கலவரம் தொடர்பாக ட்விட்டரில் கங்கனா பதிவிட்ட கருத்து தொடர்பாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கங்கனாவின் சர்ச்சை பேச்சு
இனபடுகொலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் தூண்டுவதாக கங்கனா கருத்து பதிவிட்டிருந்தார். அத்துடன் மம்மதா பானர்ஜியின் சித்தரிக்கப்பட்ட ஃபோட்டோக்களையும் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாகவே கங்கனா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள போலீசார், கங்கனா மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 504, 505, 43, 66 ஐடி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Recommended Video

வழக்கிற்கு பயப்பட மாட்டேன்
இந்த எஃப்ஆர் பற்றி கருத்து தெரிவித்துள்ள கங்கனா, இவர்கள் காட்டும் படத்தால் பயந்து விட மாட்டேன் என கூறி உள்ளார். வழக்குகளை சந்திக்க எப்போதும் தான் தயாராக இருப்பதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார். கங்கனாவின் இந்த செயல்பாடுகளால் பாலிவுட்டே பரபரப்பாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











