இந்திரா காந்தியாக நடிக்கப் போறாராம் கங்கனா ரனாவத்.. உடைச்சதே போதும் என கலாய்க்கும் நெட்டிசன்கள்!
மும்பை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளியான தலைவி மற்றும் சமீபத்தில் வெளியான தாக்கட் என அடுத்தடுத்து இரண்டு டிசாஸ்டர்களை கொடுத்த நடிகை கங்கனா ரனாவத் தற்போது இந்திரா காந்தியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட்டின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்த நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகும் புதிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் டிசாஸ்டர்களாக மாறி வருகின்றன.
இந்நிலையில், தாக்கட் படத்திற்கு கதை எழுதியவரை வைத்தே 'எமர்ஜென்சி' என்கிற டைட்டிலில் அடுத்த காவியத்தை உருவாக்கி வருகிறாராம் கங்கனா ரனாவத்.

ஜெயலலிதாவாக நடித்த கங்கனா
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்தை ஒப்பந்தம் செய்து அவர் 20 கிலோ வரை எடையை கூட்டி நடித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடாமல் படு தோல்வியை சந்தித்தது.

20 டிக்கெட்டுகள் மட்டுமே
அடுத்ததாக அறிமுக இயக்குநர் இயக்கத்தில் 80 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் செம காஸ்ட்லி ஃபர்னிச்சரான தாக்கட் படத்தை போட்டு உடைத்து இருந்தார் கங்கனா ரனாவத். 8வது நாளில் இந்தியா முழுவதும் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானது என வெளியான தகவல்களால் நாடு முழுவதும் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் கங்கனா ரனாவத்.

இந்திரா காந்தியா நடிக்கப் போறாரு
தாக்கட் படத்திற்கு பிறகு நடிப்பையே விட்டு விடுங்கள் கங்கனா ரனாவத் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வரும் நிலையில், அடுத்ததாக இந்திரா காந்தியாக 'எமர்ஜென்சி' எனும் டைட்டிலில் புதிய படத்தில் நடிப்பது மட்டுமின்றி அந்த படத்தை இயக்கவும் போகிறாராம் கங்கனா ரனாவத். கடைசியாக தனது இயக்கத்தில் வெளியான மணிகர்ணிகா ஹிட் அடித்ததை போலவே மீண்டும் தனக்கான கம்பேக் படத்தை தானே இயக்க போவதாக அறிவித்துள்ளார்.

பயோபிக் இல்லை
ஆனால், இந்த படம் இந்திரா காந்தியின் பயோபிக் படமாக இல்லாமல் அவரது எமர்ஜென்சி பீரியடில் நடந்த அரசியல் விளையாட்டுக்களை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவின் ஆதரவாளரான கங்கனா ரனாவத் காங்கிரஸ் கட்சியை பழிவாங்கவே இப்படியொரு படத்தை இயக்கி நடிக்கப் போகிறார் என்றும் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.

இந்திரா காந்தி பாவம்
ஏற்கனவே ஜெயலலிதா பயோபிக்கில் நடித்து எந்தளவுக்கு பங்கம் பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க, அடுத்து மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்து அவரையும் பாடாய்ப்படுத்த வேண்டாம் என நெட்டிசன்கள் கங்கனா ரனாவத்தை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். தாக்கட் படத்திற்கு திரைக்கதை எழுதிய ரித்தேஷ் ஷா தான் இந்த படத்திற்கும் திரைக்கதை எழுதப் போகிறாராம்.


Click it and Unblock the Notifications











