Kanguva: 2008இல் பேசியிருக்கவேண்டிய விஷயம்.. இவ்வளவு நாள் மனதில் வைத்திருந்து மேடையில் பேசிய சூர்யா!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் கங்குவா. இப்படம் நடப்பு மாதத்தில் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சூர்யா பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள கார்த்திக் சுப்பராஜ் படம் ரிலீஸ் ஆகவுள்ளாதாக கூறப்படுகின்றது. கங்குவா படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தாலும் படக்குழுவினர் கடந்த வாரத்தில் இருந்தே புரோமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற புரோமோசனின்போது சூர்யா பேசியது பாலிவுட் ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கங்குவா படம் கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாகி ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. படம் மொத்தம் இரண்டு பாகங்களாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க, அவருடன் தீஷா பதானி, பேபி தயாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் பார்த்த படக்குழுவினர் பலரும் படம் சிறப்பாக வந்துள்ளதாகவும், படத்தின் சி.ஜி. வேலைகள் பலரது மத்தியிலும் பாராட்டைப் பெறும் என கூறி வருகின்றனர்.

புரோமோசன்: இதுமட்டும் இல்லாமல், படத்தினைப் பார்த்த வசனகர்த்தா மதன் கார்க்கி படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நான் 100 முறை பார்த்ததாகவும், படத்தினை முழுவதுமாக பார்க்கும்போது படத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது எனவும் தெரிவித்தார். படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறும்போது, கங்குவா படம் தயாரித்த காலகட்டத்தில் மூன்று படங்கள் தயாரித்திருக்கலாம். கங்குவா படத்தின் பட்ஜெட்டில் மூன்று படங்கள் தயாரித்திருக்கலாம் என பலரும் கூறுகின்றனர். ஆனால் கங்குவா படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர், கங்குவா எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்தும் அதற்கு தான் எவ்வளவு ஜி.எஸ்.டி வரி கட்டினேன் எனபது குறித்தும் பில்லினை வெளியிடுகின்றேன் எனக் கூறினார்.

சூர்யா: இந்நிலையில் படத்தின் புரோமோசன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் டெல்லியிலும் நேற்று மும்பையிலும் நடைபெற்றது. இன்று அதாவது அக்டோபர் 24ஆம் தேதி ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. நேற்று மும்பையில் நடைபெற்ற புரோமோசன் நிகழ்ச்சியில் பேசுகையில் நடிகர் சூர்யா, நடிகர் அமீர் கானுக்கு நன்றி கூறீனார். கடந்த 2005ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் இந்தி ரீ-மேக்கில் 2008ஆம் ஆண்டு நடிகர் அமீர் கான் நடித்தார்.

ஆச்சரியம்: அந்தப் படத்தில் நடித்ததற்காக அமீர்கானுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் அமீர் கான் ஊடகங்களிடம் பேசுகையில், இந்தப் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்தது நடிகர் சூர்யா என தெரிவித்தார். அமீர் கான் போன்ற நடிகர் எனது பெயரைக் கூறியது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்" என பேசினார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக அமீர்கான் பேசியதை நினைவில் வைத்திருந்து இப்போது நன்றி கூறியதைப் பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். கஜினி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக சமீபத்தில் சில செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.



Click it and Unblock the Notifications











