கங்குவா ஹீரோயின் காதலருடன் நைட் எங்கே போயிருக்காங்கனு பாருங்க.. தீயாக பரவும் புகைப்படங்கள்!
மும்பை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வரும் நடிகை திஷா பதானி தனது புதிய பாய் ஃபிரெண்ட் உடன் மூவி டேட் சென்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
எம்.எஸ். தோனியின் பயோபிக் படத்தில் தோனியின் முன்னாள் காதலியாக நடித்து பாலிவுட்டில் பிரபலமானவர் திஷா பதானி.
ஜாக்கி சான் உடன் குங்ஃபூ யோகா படத்தில் நடித்து சர்வதேச ரசிகர்களை கவர்ந்த திஷா பதானி கங்குவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

கங்குவா ஹீரோயின்: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் சூர்யாவின் கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பாலிவுட்டின் இளம் கவர்ச்சி நடிகை திஷா பதானி.
ஆரம்பத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே அலெக்ஸாண்டர் அலெக்ஸ் எனும் மாடல் நடிகருடன் ஏகப்பட்ட இடங்களில் சுற்றி வருகிறார் நடிகை திஷா பதானி.

பாய் ஃபிரெண்ட் உடன் பார்பி டேட்டிங்: இந்தியாவில் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் படம் இதுவரை 50 கோடி வசூலை கடந்து அபார சாதனை செய்துள்ளது. ஆனால், அதற்கு போட்டியாக பெரிய பட்ஜெட்டில் உருவான பார்பி படத்தை இந்திய ரசிகர்கள் கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை.
இந்நிலையில், சினிமா நடிகைகளை வைத்து அந்த படத்துக்கு ஏகப்பட்ட புரமோஷன்களை படக்குழு செய்து வருகிறது. நடிகை திஷா பதானி அந்த புரமோஷனுக்காக தனது பாய் ஃபிரெண்ட் உடன் பார்பி படத்துக்கு சென்ற போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

உச்சத்தில் மார்க்கெட்: சூர்யாவின் கங்குவா படம் மட்டுமின்றி பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கல்கி படத்திலும் திஷா பதானி நடித்து வருகிறார். முன்னதாக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ராதே படத்தின் ஹீரோயினும் திஷா பதானி தான்.
பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட இளம் நடிகைகளுக்கு செம போட்டியாக பல பெரிய நடிகர்களின் படங்களை அசால்ட்டாக புக் செய்து நடித்து வருகிறார் திஷா பதானி.


Click it and Unblock the Notifications











