தங்கலான் படத்துக்கு வந்த அந்த ரெண்டு சிக்கல்.. கங்குவா படத்துக்கும் வருமா?.. கடைசி நேர பஞ்சாயத்து!
சென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து சுதந்திர தினத்தன்று வெளியான தங்கலான் திரைப்படம் முதல் நாளில் 26 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் ஈட்டியதாக அறிவிப்பு வெளியானது. 2ம் நாள் குறித்த அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
50 கோடி ரூபாய் வசூலை படம் நெருங்கியுள்ளதாக கூறுகின்றனர். முதல் வாரத்தை தாண்டி தங்கலான் திரைப்படம் 2வது வாரமும் ஓடினால் தான் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், படத்திற்கு பெரிய சிக்கலாக இருப்பது அதன் டப்பிங் மற்றும் சிஜி உள்ளிட்ட விஷயங்கள் தான். இந்நிலையில், இதே போன்ற சிக்கலில் கங்குவா படமும் சிக்கித் தவிப்பதாக கூறுகின்றனர்.
பாகுபலி படத்திலேயே: ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் புதிதாக காலகேயர்களுக்கு மொழி எல்லாம் உருவாக்கினாலும், பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் பேசும் தமிழ் அனைவருக்கும் புரியும்படியே உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்திலும் ரசிகர்களுக்கு புரியும் வகையிலேயே தமிழ் வசனங்கள் இடம்பெற்றன. ஆனால், தங்கலான் படத்தில் லைவ் டப்பிங்கில் இடம்பெற்ற வசனங்கள் புரியவில்லை என்கிற குற்றச்சாட்டை பலரும் எழுப்பி வருகின்றனர்.
சுமார் சிஜி: டப்பிங் எந்தளவுக்கு புரியவில்லையோ, அதைவிட மோசமாக படத்தின் சிஜி காட்சிகள் இடம்பெற்று தலைவலியை கொடுத்தன. நாகினி சீரியலில் வருவது போல பாம்புகள் சொதப்பல் சிஜிக்களுடன் காட்டப்பட்டது, எருமை மாடு, பிளாக் பாந்தர் என அனைத்து காட்சிகளும் சிஜி சொதப்பலாகவே இருந்தது ரசிகர்களை சோதித்து விட்டன.

கங்குவா படத்திற்கும் சிக்கல்: கங்குவா படத்தின் டிரெய்லரில் சூர்யா பேசும் உயிரே போனாலும், என் தலை யார் மீதும் மண்டியிடாது என்கிற வசனம் கூட தூய தமிழில், "அறுபட்டு என் சினம் மண்ணுருண்டாலும் உருளும் முன் நெற்றியும், முழங்காலும் மண் தொடா" என சூர்யா பேசிய வசனத்தையே பல முறை பார்த்த பின்னர் தான் ரசிகர்கள் புரிந்துக்கொண்டனர். இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் இன்னமும் மோசம் என்கிற குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. இதை கங்குவா படக்குழு சரி செய்தால் தான் கங்குவா மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் எனக் கூறுகின்றனர்.
சிஜி எப்படி இருக்கும்?: ஏற்கனவே புலி சிஜியே சுமார் என கங்குவா படத்தின் டீசர் வரும் போது கூறப்பட்டது. டிரெய்லரில், வரும் காட்சிகள் கூட கலர் கிரேடிங், சிஜி எல்லாம் இன்னமும் தெளிவாக கிரிஸ்டல் க்ளியராக வொர்க் பண்ணாமல், புகை அடித்தது போன்ற எஃபெக்டிலேயே செய்து இருப்பதாக கூறுகின்றனர். அந்த பிரச்சனையும் கங்குவா படத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஃபைன் ட்யூன் செய்ய சொல்லி வருகின்றனர்.
பிளாக்பஸ்டர் அடிக்க வேண்டுமென்றால்: கோட் படத்தில் விஜய்யின் டீ ஏஜிங் லுக் கிண்டல் அடிக்கப்பட்ட நிலையில், ஃபைனல் வெர்ஷனும் அப்படியே வந்தால் சிரமம் தான் என்பது போல, கங்குவா சிஜியும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக ஃபைன் டியூன் செய்ய வேண்டும் என்கிற பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற மொழி ரசிகர்களும், உலகளவில் ரசிகர்களும் படத்தை பார்க்கும் போது வியந்தால் தான் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











