Kanguva: “சூர்யாவை அப்படி பார்த்தது கிடையாது..” அனிமல் பட வில்லனின் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

சென்னை: சூர்யவின் கங்குவா படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் நடித்தது குறித்து பாலிவுட் நடிகர் பாபி தியோல் மனம் திறந்துள்ளார்.

Kanguva: Bobby Deol Praised Suriya is an Amazing actor and very dedicated

சூர்யா குறித்து மனம் திறந்த பாபி தியோல்
சூர்யாவின் கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா, அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. வேகமாக நடைபெற்று வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, நட்டி ஆகியோர் நடித்து வருவதாக ஏற்கனவே அப்டேட்கள் வெளியாகின. தற்போது இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் நடிப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பாபி தியோல், கடைசியாக அனிமல் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் - பாபி தியோல் மோதும் சண்டைக் காட்சி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், கங்குவா படத்தில் பாபி தியோலும் நடித்து வருவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்குவா படத்திலும் பாபி தியோல் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆக்‌ஷன் காட்சிகள் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கங்குவா படத்தில் நடித்தது குறித்து பாபி தியோல் மனம் திறந்துள்ளார்.

சமிபத்திய பேட்டி ஒன்றில், சூர்யா அற்புதமான அர்ப்பணிப்பு கொண்டு நடிகர் என்றும் அவருடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், கங்குவா படத்தில் நான் நடித்து வரும் கேரக்டர் என்னுடைய வழக்கமான பாத்திரத்திலிருந்து வேறுபட்டது. எனக்கு தமிழ் தெரியாது, அதனால்தான் சொல்கிறேன், இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. என்னால் ஒன்றிரண்டு மாதங்களில் தமிழை கற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல் இயக்குநர் சிவாவும் பழகுவதற்கு மிக இனிமையானவர் என பாபி தியோல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3டி டெக்னாலஜியில் 38 மொழிகளில் வெளியாகவுள்ள கங்குவா, பீரியட் ஜானரில் ஹிஸ்டாரிக்கல் படமாக உருவாகிறது கங்குவா. இந்தப் படம் ஐமேக்ஸ் வெர்ஷனிலும் வெளியாகவுள்ளதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X