Kanguva Box Office Prediction: வேட்டையன் முதல் நாள் வசூலை முந்துமா கங்குவா?.. வசூல் கணிப்பு இதோ!

சென்னை: சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட படமாக 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு தியேட்டர்களில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. ஆந்திராவிலும் கங்குவா படத்துக்கு நல்ல வரவேற்பு டிக்கெட் புக்கிங்கில் தெரிகிறது.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சிறுத்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிவா சூர்யாவை வைத்து இயக்கியுள்ள இந்த படத்தில் கார்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் கிளைமேக்ஸில் வர காத்திருக்கிறார்.

kanguva box office vettaiyan

பாலிவுட் நடிகர்களான திஷா பதானி மற்றும் பாபி தியோல் நடித்துள்ள நிலையில், வட இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸையும் கங்குவா படம் டார்கெட் செய்துள்ளது. 3டி டெக்னாலஜியில் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக வந்து கங்குவா படத்தை பார்த்தால் மிகப்பெரிய வசூல் வேட்டையை படம் குவிக்கும் என்கின்றனர்.

களமிறங்கும் கங்குவா: பல்வேறு தடைகளை தாண்டி கங்குவா திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி பல இடங்களில் ஆரஞ்சு அலர்ட்டாக மாறி வருகிறது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதற்கும் துணிந்தவன் படம் பெரிதாக ஓடாத நிலையில், இந்தளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பு கிடைத்திருப்பதே பெரிய விஷயம் என்கின்றனர்.

முதல் நாள் வசூல் கணிப்பு: கங்குவா திரைப்படம் ஓவர்சீஸில் இதுவரை 15 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 20 கோடி ரூபாய் வரை முதல் நாளில் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக கங்குவா திரைப்படம் இந்தியாவில் அதிகபட்சமாக 40 முதல் 45 கோடி வரை வசூல் செய்யும் என்றும் உலகளவில் 70 முதல் 75 கோடி வரை முதல் நாளில் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன் முதல் நாள் வசூலை முந்துமா?: ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் நடித்த வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் 70 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டிய நிலையில், அந்த வசூலை கங்குவா முறியடிக்க வாய்ப்புகள் உள்ளன என்றே கூறுகின்றனர். ஆனால், டிக்கெட் புக்கிங் பெரிதாக கை கொடுக்கவில்லை என்றால் 60 கோடி முதல் 65 கோடி வசூல் வந்தால் வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூலை கங்குவா முறியடிக்காது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாசிட்டிவ் விமர்சனங்கள் முக்கியம்: கங்குவா படத்துக்கு இதுவரை சூர்யா ரசிகர்களை தவிர வேறு எந்த ரசிகர்களும் பெரிதாக பாசிட்டிவிட்டியை பரப்பவில்லை. பொன்னியின் செல்வன் படத்துக்கு தமிழ் மக்களிடையே வரவேற்பு இருக்க அந்த கதை பலரும் அறிந்த ஒன்று. ஆனால், கங்குவா திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றால் மட்டுமே அந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X