50 சதவீதத்துக்கு மேல் எகிறிய பட்ஜெட்.. சிறுத்தை சிவா இப்படி பண்ணிட்டாரே.. லாபம் தருமா கங்குவா?

சென்னை: இயக்குநர்கள் ஷங்கர், அட்லீ உள்ளிட்டோர் பிரம்மாண்ட படங்களை உருவாக்க தொடங்குவதற்கு முன் அறிவிக்கும் பட்ஜெட்டை விட முடியும் போது பல கோடி பட்ஜெட்டை அதிகரித்து விடுவார்கள் என பலரும் கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த வரிசையில் சிறுத்தை சிவாவும் தற்போது சேர்ந்து விட்டார் என்றே கோடம்பாக்கத்தில் கூறுகின்றனர்.

கங்குவா படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா, பாபி தியோல் மற்றும் திஷா பதானி நடித்து வருகின்றனர்.

Kanguva budget crosses over 50 percentage from the initial budget

தேர்தல் முடிந்ததும் கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில், கங்குவா படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட 50 சதவீதம் எகிறி விட்டதாக பாஃப்டா தனஞ்செயன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

பாகுபலியை விட சூப்பர்: இந்திய படங்களிலேயே பீரியட் படம் என்றால் அதில் பாகுபலி தான் நம்பர் ஒன் என சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பாகுபலியை விட பிரம்மாண்டமாக கங்குவா படம் உருவாகி வருகிறது என்றும் அந்த படம் வெளியானதும் ஒட்டுமொத்த சினிமா உலகினர் கவனமும் கங்குவா படத்தின் மீதுதான் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

நிஜ புலி: கங்குவா படத்தின் டீசரில் புலி, முதலை உள்ளிட்ட உயிரினங்கள் காட்டப்படுகின்றன. அதெல்லாம் சிஜி என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், நிஜமாகவே புலியை வைத்து படமாக்கி உள்ளார் சிறுத்தை சிவா என்றும் அதன் பின்னர் தான் அதில் சிஜி மிக்ஸ் செய்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

50 சதவிதம் எகிறிய பட்ஜெட்: கங்குவா படம் ஆரம்பிக்கும் போது சிவா சொன்ன பட்ஜெட்டை எல்லாம் தாண்டி பல மடங்கு சென்று விட்டது என்றும் கிட்டத்தட்ட 50 சதவீதம் படத்தின் பட்ஜெட் அதிகரித்தாலும் ஞானவேல் ராஜா ரொம்பவே கான்ஃபிடன்ஸ் ஆக இந்த படத்தின் மீது உள்ளார். இந்த படம் வெற்றிப் பெற்றால் கங்குவா 2 மற்றும் 3 என வரிசையாக பல பாகங்கள் வெளியாகும் என்றும் அந்தளவுக்கு இந்த கதை மிகப்பெரிய கதை என்றும் தனஞ்செயன் கூறியுள்ளார்.

லாபம் வருமா?: அதிக பொருட்செலவில் உருவாகும் சூர்யா படமாக கங்குவா உருவாகி வருகிறது. பல ஆண்டுகளாக சூர்யா படங்கள் தியேட்டரில் பெரிதாக ஓடாத நிலையில், கங்குவா சூர்யாவுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் படமாக அமையுமா? என்கிற கேள்வியும் கொஞ்சம் சொதப்பினால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும் என்றும் கூறுகின்றனர். ஆனால், சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா கங்குவா நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் பந்தயம் அடிக்கும் என்றும் இதுவரை தமிழ் படங்கள் செய்ததை விட பெரிய வசூலை குவிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

அடுத்தும் பிரம்மாண்டம்: கங்குவா படத்தைத் தொடர்ந்து சூர்யா அடுத்து நடிக்கவுள்ள கர்ணா படமும் பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாக காத்திருக்கிறது வாடிவாசல் மற்றும் புறநானூறு உள்ளிட்ட படங்கள் வணங்கான் படத்தை போலவே டிராப் ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர். ஆனால், சூர்யா தரப்பில் இருந்து அந்த இரு படங்களும் கால தாமதமாக உருவாகும் என்றே கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X