Kanguva Day 3 Box Office: 100 கோடி வசூலை கடந்ததா கங்குவா?.. 3 நாட்களில் சூர்யா நடத்திய வசூல் வேட்டை!

சென்னை: நடிப்பின் நாயகன் சூர்யா அனைத்து நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி தனது நடிப்பால் படத்தை தோள் மீது சுமந்தது போல சூர்யாவுக்காக அவரது ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை நடத்தி வருகின்றனர். கங்குவா திரைப்படம் சோலி முடிந்தது என பலரும் விமர்சித்து வரும் நிலையில், 3வது நாளிலும் சுமாரான வசூல் வேட்டையை கங்குவா படம் நடத்தியிருக்கிறது.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, கார்த்தி, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், நட்டி நட்ராஜ், வசுந்தரா, போஸ் வெங்கட் மற்றும் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

kanguva box office suriya

தியேட்டரில் ஆதி நெருப்பே பாடலுக்கு எல்லாம் சூர்யா ரசிகர்கள் எழுந்து ஆட்டம் போட்டு வருகின்றனர். யோலோ பாடலில் திஷா பதானியின் பிகினி கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.

கங்குவா கதை என்ன?: அபார மூளை சக்தி உடைய சிறுவனை ரஷ்யாவில் பரிசோதனை செய்து வருகின்றனர். அங்கிருந்து சிறுவன் தப்பிச்செல்கிறார். கோவாவில் உள்ள சூர்யாவை சந்திக்கிறார். சிறுவனை பார்த்ததும் அவருக்கு இனம் புரியாத நினைவுகள் தோன்றுகின்றன. அங்கிருந்து 1070 காலக்கட்டத்தில் கங்குவாவாக சூர்யா வருகிறார். சூர்யாவுக்கும் அந்த சிறுவனுக்கும் என்ன தொடர்பு, கார்த்தி அந்த சிறுவனை வைத்து என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்பதையெல்லாம் 2ம் பாகத்தை பார்த்தால் தான் புரிந்துக் கொள்ள முடியும் என்கிற அளவுக்கு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சிறுத்தை சிவா. மூலக்கதைக்கு கொஞ்சம் கிளாரிட்டி கொடுத்து தேவையில்லாத சத்தத்தை குறைத்திருந்தாலே கங்குவா தப்பித்து இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கங்குவா படத்தின் பாசிட்டிவ்ஸ்: சூர்யா பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ் ஆக நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் எந்தவொரு அழுத்தமும் ஆழமான கதாபாத்திர வடிவமைப்பும் இல்லை. ஆனால், கங்குவா கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கும் நடிப்பை காண நிச்சயம் ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வது உறுதி. தங்கலான் படத்தை தியேட்டரில் மிஸ் செய்து விட்டு பலரும் இன்னமும் ஓடிடியில் வரவில்லையே என தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், கங்குவா படத்துக்கு அதே தப்பை செய்யமாட்டோம் என எப்படி இருந்தாலும் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என சூர்யா ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று வருகின்றனர்.

100 கோடி வசூல்: 2 நாட்களில் கங்குவா திரைப்படம் 89.32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலை கங்குவா கடந்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களும் தகவல் தெரிவித்துள்ளன. இந்நிலையில், 3வது நாளான நேற்று 12 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் உலகளவில் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக கங்குவா திரைப்படம் 101 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 3 நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்தது கங்குவா என்கிற போஸ்டரை இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது வாரமும் படம் ஓடினால் தான் 150 கோடி வசூலையாவது படம் அள்ளும் என்றும் இல்லையென்றால் அப்படியே லைஃப் டைம் வசூல் நின்று விடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X