அஜித்திடம் கங்குவா கதை சொன்னேன்..அவர் ரியாக்‌ஷன் இதுதான்.. சிவா சொன்ன சீக்ரெட்

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. தற்காலத்திலும், சரித்திர காலத்திலும் நடக்கும்படியாக கதையையும், திரைக்கதையையும் உருவாக்கியிருக்கிறார் சிவா. அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் இப்படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் சிவா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

சிறுத்தை படத்தில் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அதன் காரணமாக அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுகிறார். அந்தப் படம் மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி வீரம் படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட். குறிப்பாக வீரம் படத்துக்கு முன்னதாக சில காலம் அஜித் தொடர்ந்து நகரங்களை மையப்படுத்திய கதைகளில் நடித்தார். பல வருடங்களுக்கு பிறகு அஜித்தை ஸ்க்ரீனில் வேட்டி சட்டையில் ரசிகர்கள் வீரத்தில்தான் பார்த்தார்கள்.

ajithkumar siva kanguva

அஜித்துடன் பயணம்: வீரம் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தொடர்ந்து அஜித்தை வைத்து படங்களை இயக்க ஆரம்பித்தார் சிவா. அதன்படி வெளியான வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் விவேகம் தவிர்த்து மற்ற படங்கள் ஹிட். இதனால் அஜித் - சிவா காம்போ தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்த ஒன்றாக மாற்றியது. முக்கியமாக விஸ்வாசம் படம் பேட்ட படத்துக்கு போட்டியாக களமிறங்கி பந்தயம் அடித்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அண்ணாத்த: அஜித்தை வைத்து வரிசையாக படங்கள் கொடுத்த சிவா அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்தார். நிச்சயம் இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருந்தார் ரஜினி. ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துபோகும்படி வந்தது படத்தின் ரிசல்ட். படத்தின் தோல்வி மட்டுமின்றி அந்தப் படத்தை கடுமையாக ட்ரோலும் செய்தனர். இருந்தாலும் சிவாவுக்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசளித்தார். ஆனால் சிவா ரிசல்ட்டால் கடும் அப்செட் என்றே கூறப்பட்டது.

கங்குவா: இப்போது அவர் கங்குவா படத்தை இயக்கியிருக்கிறார். சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் சிவா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அஜித்துடன் நான் 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை ட்ராவல் செய்திருக்கிறேன். எங்ளுக்கிடையேயானது ஒரு அழகான ட்ராவல். நிறைய விஷயங்களை அதுகுறித்து நான் பகிர்ந்துகொண்டே வருகிறேன்.

அஜித் சொன்ன அட்வைஸ்: அவர் என்னிடம், உனக்கு நிறைய திறமை இருக்கிறது. அதனை வெளிப்படுத்து என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நீ புது புது இடங்களுக்கு போக வேண்டும் என்று சொல்லி என்னை மனதார வாழ்த்துவார். எனக்குள் இருந்த கான்ஃபிடென்ஸ் லெவல் இவ்வளவு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அஜித்தான். அவர் ஒரு சிறந்த வழிகாட்டி. முக்கியமாக நிறைய தத்துவங்களை அவர் என்னிடம் சொல்வார். அது அவ்வளவு அருமையாக இருக்கும்.

அஜித் ரியாக்‌ஷன்: சூர்யாவை வைத்து இப்போது செய்திருக்கும் கங்குவா கதையை முதலில் அஜித்திடம் சொன்னேன். கதையை கேட்டுவிட்டு நன்றாக செய் என்று வாழ்த்தினார். ஃபீல் குட் படம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் பட்ஜெட் இருக்கிறதே. அதில் சாத்தியப்படுமா என்றால் இப்போது சாத்தியப்படும்" என்றார். முன்னதாக அஜித்துடன் சிவா மீண்டும் இணையவிருக்கிறார். அந்தப் படத்தின் வேலைகளையும் அவர் துரிதப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X