Kanguva Box Office: ஜோதிகா பாராட்டுன அமரன் பக்கத்துல கூட வரமுடியாது.. அதல பாதாளத்தில் கங்குவா வசூல்!

சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதை பார்த்து ஷாக்கான அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா கண்டனம் தெரிவித்து போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். முன்னதாக சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை மனமார பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்ததும் அவர்தான்.

இந்த ஆண்டு நல்ல படங்களை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட தவறவே இல்லை. எல்ஜிஎம் படத்தின் மூலம் தோல்வியை சந்தித்த ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்தை பலரும் அப்படி கொண்டாடினார்கள்.

kanguva box office suriya

மாரி செல்வராஜின் வாழை படத்தை பார்த்துவிட்டும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை பார்த்துவிட்டும் பலர் தியேட்டரை விட்டு வெளியே வரும் கண்ணீருடன் வந்தனர். அதே மக்கள் தான் கங்குவா பார்த்துவிட்டு தலைவலியுடன் வந்தோம் என திட்டும் போது மட்டும் ஜோதிகா இப்படி ரசிகர்களையும் விமர்சகர்களையும் பற்றி பேசலாமா? என்றும் அதுவும் சில பெரிய நடிகர்களின் படங்களை குப்பை என்கிற ரீதியில் வன்மத்தை கக்கலாமா? என்றும் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்நிலையில், கங்குவா படத்தின் திங்கட்கிழமை வசூல் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூர்யாவுக்காக பார்க்கும் ரசிகர்கள்: கங்குவா படத்தில் சூர்யா 47 வயதிலும் சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டு ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார். படம் முழுக்க அவரது நடிப்பை எங்கேயும் குறை சொல்லவே முடியவில்லை. பிரான்சிஸ் போர்ஷன் தான் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டது. அங்கேயும் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி காமெடி கைகொடுத்திருந்தால் படம் இன்னமும் அதிக வசூல் வேட்டை நடத்திருக்கும் என சூர்யா ரசிகர்கள் கூறுகின்றனர்.

கங்குவா சன்டே வசூல் அறிவிப்பு வரல: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக அனிமல் படத்தில் நடித்த பாபி தியோல் நடித்துள்ளார். கங்குவா திரைப்படம் சனிக்கிழமை வரை அதிகாரப்பூர்வமாக 127.64 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வசூல் குறித்து நேற்று எந்த அப்டேட்டையும் அவர்கள் செய்யவில்லை.

திங்கட்கிழமை வசூல்: ஞாயிற்றுக்கிழமை கங்குவா திரைப்படம் இந்தியா முழுவதும் அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் ஓபனிங் டே வசூல் 23 கோடி ரூபாயாக இருந்த நிலையில், முதல் ஞாயிற்றுக்கிழமை வசூல் இந்தளவுக்கு குறைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், திங்கட்கிழமையான நேற்று இந்தியா முழுவதுமே வெறும் 3 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். நார்த் அமெரிக்கா உள்ளிட்ட ஓவர்சீஸில் படம் முதல் நாளே நாக்கவுட் ஆகிவிட்டதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை கங்குவா திரைப்படம் 140 கோடிக்கும் குறைவான வசூலைத்தான் உலகளவில் ஈட்டியிருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமரன் பக்கம் கூட வராது: சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 3வது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், நேற்று வரை 295 கோடி வசூலை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் 300 கோடி வசூலை உலகளவில் கடந்துவிட்டது என்கிற அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிடுவார்கள் என தெரிகிறது. அமரன் படத்தை ஜோதிகா மனமார பாராட்டிய அளவுக்கு அவராலேயே கங்குவா படத்தை பாராட்ட முடியவில்லை என்றும் அமரன் படத்தின் அருகில் கூட கங்குவா வசூல் வராது என்கின்றனர். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 2000 கோடி வசூல் செய்யும் பாகுபலியை பீட் செய்யும் என்றெல்லாம் பேசியது படத்துக்கு எதிராக திரும்பவே இத்தனை நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X