அய்யோ கங்குவா படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி.. படத்தொகுப்பாளர் மரணம்.. சோகத்தில் டீம்
சென்னை: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கிறார்.நவம்பர் 14ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் சூழலில் படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி தரும் விதமாக படத்தின் எடிட்டர் நிஷாத் யூசூஃப் மரணமடைந்திருக்கிறார்.
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பாலாவின் வணங்கான் படத்தில் கமிட்டாகி அதிலிருந்து விலகிய சூர்யா; சிவாவின் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். சிவா இயக்கிய அண்ணாத்த படம் படுமோசமான தோல்வியை சந்தித்ததன் காரணமாக சூர்யாவை வைத்தும் சிவா செய்துவிடுவாரோ என்றே ரசிகர்கள் ஓபனாக சமூக வலைதளங்களில் பேசினார்கள். ஆனாலும் படத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஒருபக்கம் இருக்கவும் செய்தது.

சூப்பர் அப்டேட்டுகள்: அந்த நம்பிக்கை பொய்த்துப்போகாத வகையில் படத்தின் க்ளிம்ப்ஸ், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்,ட்ரெய்லர் என அனைத்துமே இருப்பதாக சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சிவா சூர்யாவை வைத்து எந்த சொதப்பலும் செய்திருக்கமாட்டார் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் படம் என்பதும்; படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு பாகங்கள் கங்குவா: கங்குவா படம் பீரியட் ஜானரில் உருவாவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானர் மட்டுமில்லை; தற்காலத்தில் நடக்கும்படியும் சிவா கதையை அமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு பாகங்களாக படம் உருவாகியிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது.
நவம்பர் 14ல் ரிலீஸ்: முதலில் படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால் அன்றைய தினம் வேட்டையன் ரிலீஸானதால் கங்குவா ரிலீஸ் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று சூர்யா அறிவித்தார். சமீபத்தில்தான் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்தச் சூழலில் படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்று நடந்திருக்கிறது.
எடிட்டர் மரணம்: அதாவது ஏற்கனவே கங்குவா படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் உயிரிழந்த சூழலில் இப்போது படத்தின் எடிட்டர் நிஷாத் யூசூஃப் மரணமடைந்திருக்கிறார். கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும் பனம்பில்லி நகரில் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை 2 மணிக்கு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மரணத்துக்கான காரணத்தை இன்னும் கண்டறியவில்லை. மேலும் அவரது மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். யூசுஃபுக்கு 43 வயதாகும். இவர் ஆர்.ஜே.பாலாஜி - சூர்யா இணையவிருக்கும் படத்துக்கு எடிட்டராக பணியாற்றவிருந்தார். கங்குவா ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் எடிட்டர் நிஷாத்தின் மரணம் படக்குழுவுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











