ஆடி மாசத்துக்கு ஏத்த பாட்டு.. நலமான்னு சொல்லும் போதே யோசிச்சிருக்கணும்.. குவியும் கங்குவா மீம்ஸ்!
சென்னை: நடிகர் சூர்யாவின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "ஆதி நெருப்பே" பாடல் தற்போது வெளியானது. புஷ்பா படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் போட்ட அளவுக்கு பாட்டை போட்டிருப்பார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சூர்யா ரசிகர்களுக்கு ஆடி மாச அம்மன் ஸ்பெஷல் பாடலை போட்டுள்ளாரே என நெட்டிசன்கள் தற்போது பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
"மலையனூர் அங்காளியே.. தாயே.. மாகாளி திரிசூலியே" என்கிற பாடல் ரேஞ்சுக்கு இந்த பாடல் அப்படியே அம்மன் பாடல் போல இருப்பதாக பலரும் ஆடி மாத பரிதாபங்கள் வீடியோக்களையும் மீம்களையும் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

கங்குவா படத்தின் நெருப்பு பாடலாக உருவாகி உள்ள இந்த பாடலின் விஷுவல்ஸ் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான விசில் போடு பாடலுக்கு முட்டுக் கொடுத்தது போல தற்போது சூர்யா ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர் என ட்ரோல்கள் பறக்கின்றன.
ஃபயரா இல்லை: "நெருப்புடா.. நெருங்குடா பார்ப்போம்" ரேஞ்சுக்கு ஃபயர் சாங் ஃபயராக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கங்குவா படத்தின் முதல் பாடல் "ஆதி நெருப்பே.. ஆறாத நெருப்பே.. அணையாத நெருப்பே" என தேவிஸ்ரீ பிரசாத் போட்டுக் கொடுத்து இருப்பதை பார்த்தால் ரொம்பவே டவுட்டா இருக்கே என கிண்டல் பண்ண ஆரம்பித்து விட்டனர்.
குவியும் மீம்ஸ்: டேய் இது காஞ்சனா, அரண்மனை படங்களில் கடைசியாக வரும் அம்மன் பாடல் மாதிரி இருக்கேடா என படிக்காதவன் விவேக் மீமை போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ரசிகர்கள் கொண்டாடும் பாடல்களை போடுவதற்கு பதில், ஹேட்டர்கள் கொண்டாடும் பாடல்களையே வர வர இசையமைப்பாளர்கள் போட்டு வருவதற்கு பின்னணியில் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

கருடன் வைப்ஸ்: கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை கலாய்க்காதீங்க, அப்படியே கருடன் படத்தின் திருவிழா சீனுக்கு வச்சு பாருங்க வேறலெவல் வெறித்தனம் என சூர்யா ரசிகர்கள் கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள் வைபில் மூழ்கிப் போயுள்ளனர். கங்குவா ஃபயர் சாங் ஆடி மாசத்துக்கு ஏத்த சரியான பாடல் என்றும் இனிமேல் ஒவ்வொரு கோயில் திருவிழாவிலும் இதை பயன்படுத்தலாம் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











