வாயை பொளந்து பார்க்கப் போறாங்க.. 'மொழி' பட காமெடி சீனை போட்டு சூர்யாவை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!
சென்னை: கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் செய்யும் என ஓவர் பில்டப் கொடுத்தால் ஓபனிங் வாரத்திலேயே போட்ட காசு வந்தாலே தப்பித்துக் கொள்வோம் என நினைத்தே சூர்யா மற்றும் ஞானவேல்ராஜா ரசிகர்களிடம் மோசடி செய்து இப்படியொரு படத்தை வெளியிட்டுள்ளார்களா என தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து மைக்கை பார்த்ததும் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
இந்தியன் 2 படத்திற்கு பிறகு இந்த ஆண்டு ரசிகர்களை அதிகமாக தியேட்டரில் வச்சு செய்த படம் என்றால் அது கங்குவா தான் என்றும் ஜீரணிக்கவே முடியவில்லை என பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் மீம்ஸ் க்ரியேட்டர்கள் ஒருவாரத்துக்கு கன்டென்ட் கிடைச்சுடுச்சு என 24 மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்து சோஷியல் மீடியாவை நிரப்பி வருகின்றனர்.

மொழி படத்தில் இடம்பெற்ற அந்த வைரல் டெம்பிளேட்டை தற்போது சூர்யாவின் பேச்சுடன் சேர்த்து எடிட் செய்து நெட்டிசன்கள் நோகடித்து வருகின்றனர்.
கொந்தளித்த மக்கள்: பாகுபலி அளவுக்கு படத்தை நடிகர் சூர்யாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் பில்டப் செய்த நிலையில், அவர்களை நம்பி ஏமாந்து முதல் நாளே 3டியில் படத்தை பார்க்க குடும்பத்துடன் பல ஆயிரம் ரூபாயை செலவு செய்து இப்படி தலைவலியை வாங்கிக் கொண்டு போக வேண்டுமா? என ரசிகர்கள் நடிகர் சூர்யாவை பார்த்து விளாசி வருகின்றனர். இந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் வெளியான படங்கள் எல்லாம் மக்களை ரசிக்க வைத்த நிலையில், பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாமே தேவையில்லாத ஆணியாகவே மாறியுள்ளன.

சூர்யா ஏமாற்றிவிட்டார்: கடந்த ஒரு மாதமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு புரமோஷன் சென்ற இடங்களில் எல்லாம் நடிகர் சூர்யா இந்த படத்துக்கு கொடுத்த பில்டப்பை ஒவ்வொன்றாக பார்த்து வெறியேறி போயிருந்த சூர்யா ரசிகர்கள் கடைசியில் படத்தை போய் பார்த்தால் சூர்யா பேச்சுக்கும் படத்துக்கும் எந்தவொரு சம்மந்தமே இல்லை என்றும் சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜாவை தாண்டி ரசிகர்களை அதிகம் ஏமாற்றியது சூர்யா தான் என பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

கார்த்தி வந்த சீன் தான் மாஸ்: கடைசியாக கார்த்தி வரும் அந்த 2 நிமிட சீனில் இருக்கும் மாஸ் படம் முழுவதும் இல்லாதது தான் மிஸ்ஸிங் என்றும் பெருமாச்சி ஊரில் சூர்யாவை தவிர ஆம்பளைங்களே இல்லாத போல காட்டியிருப்பது கடுப்பை அதிகமாக கிளப்பியுள்ளது. பெண்கள் சண்டை போடும் காட்சியில் சூர்யாவுடன் பீப்பி ஊதிக் கொண்டே பேசும் காட்சிகள் லாஜிக் மீறலாக இருந்தாலும், அந்த சீன் நல்லா இருந்தது. ஆனால், சூர்யாவின் அப்பா என காட்டப்படும் நபர் கூட வீரத்துடன் சண்டை போடுவது போல காட்டவே இல்லையே ஏன்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மொழி பட காமெடி: இந்திய சினிமாவில் உள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் "வாயை பொளந்துக்கிட்டு பார்ப்பாங்க" என சூர்யா பேசிய வீடியோ காட்சியை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. மொழி படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் லிப்ட்டில் சிரித்துக் கொண்டே வரும் செம காமெடி மீம் டெம்பிளேட்டை போட்டு பங்கம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











