கங்குவாவுக்கு விழும் செம அடி.. சிவகார்த்திகேயனை திட்டும் சூர்யா ரசிகர்கள்.. என்ன இப்படி இறங்கிட்டாங்க?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியிருக்கிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்துக்கு மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அடுத்தக்கட்டத்துக்கு சென்றிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சூர்யாவின் நடிப்பில் கங்குவா திரைப்படம் இன்று வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை சந்த்தித்துவரும் நிலையில் சிவகார்த்திகேயனை சூர்யாவின் ரசிகர்கள் வம்புக்கிழுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் 2022ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ப்ரின்ஸ். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. .அந்தத் தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயனின் கரியர் இனி அவ்வளவுதான்; அவரால் இனி எழுந்திருக்கவே முடியாது என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் சிவா அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் அடுத்த படத்தின் கதையை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்தார்.

suriya kanguva sivakarthikeyan

வரிசையாக ஹிட்டுகள்: அப்படி அவர் நடித்த படமான மாவீரன் படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்து முடித்திருந்த அயலான் திரைப்படமும் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இதன் காரணமாக ப்ரின்ஸ் தோல்விக்கு பிறகு எழுந்திருக்க மாட்டார் என்று கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயன்; தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும், கொட்டப்பட்ட வன்மங்களுக்கும் தரமான பதிலடியாக அந்தப் படங்களை கொடுத்தார்.

அமரன் பாய்ச்சல்: இதனையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்தார் அவர். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க ஜிவி பிரகாச் இசையமைத்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. கண்டிப்பாக இதனையும் ஹிட் படமாக கொடுத்து ஹாட்ரிக் வெற்றியோடு சிவா வலம் வருவார் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு படத்துக்காக காத்திருந்தார்கள்.

அமரனும் ஹிட்: அவர்கள் எதிர்பார்த்தபடியே அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த மாதம் வெளியான அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட். 15 நாட்களில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் படம் வசூலித்தது. மேலும் சிவகார்த்திகேயனின் நடிப்பும் மிக அருமையாக மெருகேறியிருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக சிவாவின் திரைவாழ்க்கை அமரனுக்கு முன், அமரனுக்கு பின் என்று மாறும் என கூறிவருகின்றார்கள். அதன்படிதான் நடக்கவும் செய்கிறது. அமரன் வெற்றிக்கு பிறகு எஸ்கே தனது சம்பளத்தை 50 கோடி ரூபாய்வரை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் வீடியோ: மேலும் அமரனுக்கு இன்னும் கூட்டம் வருவதால் ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்கும்படி திரையரங்க உரிமையாளர்களும் படக்குழுவிடம் கேட்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க நேற்று சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக தன் வீட்டு கிச்சனில் ஆர்த்திக்கு தெரியாமல் அவருக்கு பின்னால் அமரன் கெட்டப்பில் சென்று ஆர்த்தியை திக்குமுக்காட வைத்தார் சிவகார்த்திகேயன். அந்த வீடியோ ட்ரெண்டானது.

திட்டும் சூர்யா ரசிகர்கள்: இந்நிலையில் கங்குவா திரைப்படம் இன்று வெளியாகி தோல்விப்படம் என்ற பெயர் வாங்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. நிலவரம் இப்படி இருக்க இன்று கங்குவா ரிலீஸாவதால்தான் அமரன் கெட்டப்பில் சென்று சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டார் என்று சூர்யா ரசிகர்கள் பேச தொடங்கினார்கள். ஆனால் பலரும் இதில் என்ன லாஜிக் இருக்கிறது. தனது மனைவி பிறந்தநாளுக்கு அவர் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். இதில் அவர் கங்குவாவை எங்கு கெடுக்கிறார் என்று பதிலடி கொடுத்தார்கள்.

மேலும், சூர்யா ரசிகர்களோ கங்குவா படத்தை காலி செய்வதற்காகத்தான் அமரன் திரைப்படத்தை இன்னமும் தியேட்டரில் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஓடிடி ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தார்கள். இதனையும் கவனித்த நெட்டிசன்கள், கங்குவா படம் சரியில்லை. சிவாவும், சூர்யாவும் சொதப்பிவிட்டார்கள். அதை ஒத்துக்கொள்ளாமல் சிவகார்த்திகேயன் மீது சூர்யா ரசிகர்கள் ஏன் வன்மத்தை கொட்ட வேண்டும். இதையெல்லாம் பார்க்கும்போது அவரது வளர்ச்சியை இவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்பது உறுதியாகியிருப்பதாக ஓபனாக பேசிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X