Kanguva Glimpse: சூர்யா பிறந்தநாளில் கங்குவா க்ளிம்ப்ஸ்... போஸ்டரிலேயே மிரள வைத்த சிறுத்தை சிவா!

சென்னை: சூர்யா தற்போது 'சிறுத்தை' சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, கங்குவா க்ளிம்ப்ஸ் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியாகவுள்ளது.

 Kanguva Glimpse: Kanguva Glimpse releases on Suriyas birthday on 23rd

சூர்யா பிறந்தநாளில் கங்குவா க்ளிம்ப்ஸ்: சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் கங்குவா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகிறது. அதேபோல், மொழிகளில் வெளியாகும் எனவும் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கேரியரில் கங்குவா ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கங்குவா என்றால் நெருப்பு என்ற அர்த்தம் என்பதால், படம் முழுக்க தரமான ஆக்‌ஷன் ட்ரீட் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அதனை கன்ஃபார்ம் செய்யும் விதமாக தற்போது ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் ரிலீஸ் தேதி அப்டேட்டாக வெளியாகியுள்ளது இந்த போஸ்டர். அதன்படி சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி கங்குவா க்ளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முக்கியமாக இந்த அறிவிப்புடன் வெளியான போஸ்டரில் சூர்யாவின் லுக் செம்ம மிரட்டலாக உள்ளது. சூர்யாவின் வலது கையில் பழங்கால டாட்டூஸ்கள் இருக்க, வாளுடன் மாஸ் காட்டுகிறார்.

மேலும், "The Man... The Wild... The Story.." என்ற கேப்ஷனும் கொடுத்து, தி கிங் அரைவ்ஸ் என எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் இயக்குநர். போஸ்டரிலேயே சம்பவம் செய்துள்ள சிவா, கங்குவா க்ளிம்ப்ஸில் இன்னும் அதகளம் செய்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சூர்யாவின் பிறந்தநாள் விருந்தாக வெளியாகவுள்ள கங்குவா க்ளிம்ப்ஸ், ரசிகர்களின் ஹைப்பை தாறுமாறாக எகிற வைத்துள்ளது.

இந்நிலையில், சூர்யாவின் 43வது பட அப்டேட்டும் ஜூலை 23ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக இது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் 100வது படமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரரைப் போற்று வெற்றியைத் தொடர்ந்து 'சூர்யா 43' படத்திலும் சூர்யா, சுதா, ஜிவி பிரகாஷ் கூட்டணி இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X