Kanguva: ஹாலிவுட்டுக்கே சவால் விடும் கங்குவா க்ளிம்ப்ஸ்... வீரன், சூரனாக மிரட்டும் சூர்யா!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் சூர்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் செம்ம மாஸ்ஸாக வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

 Kanguva Glimpse: Suriyas Kanguva Glimpse released now

வெளியானது கங்குவா க்ளிம்ப்ஸ்:சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தை 'சிறுத்தை' சிவா இயக்குகிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்து வரும் இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. அதேபோல், கங்குவா படத்தை 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. சூர்யாவின் கேரியரில் தரமான சம்பவமாக கங்குவா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை நிரூபிக்கும் விதமாக கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கங்குவா க்ளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சூர்யாவின் பிறந்தநாளான இன்று (ஜூலை 23) நள்ளிரவு 12.01 மணிக்கு க்ளிம்ப்ஸ் வெளியானது. ஏற்கனவே கடந்த 3 தினங்களாக கங்குவா படத்தில் இருந்து சூர்யாவின் போஸ்டர்கள் வெளியாகியிருந்தன.

போஸ்டரில் மிரட்டிய சூர்யா, இப்போது கங்குவா க்ளிம்ப்ஸில் மரண மாஸ் காட்டியுள்ளார். ஹலிவுட் படங்களுக்கு நிகராக ஆக்‌ஷனில் மிரட்டுகிறது இந்த க்ளிம்ப்ஸ். முக்கியமாக சூர்யாவின் லுக், அசுரத்தனமான நடிப்பு, கிராபிக்ஸ், பிஜிஎம் என அனைத்தும் ரசிகர்களை அடித்து துவம்சம் செய்கிறது. தமிழில் இதுவரை இப்படியொரு படம் வந்தது இல்லை என சொல்ல வைக்கும் அளவிற்கு கங்குவா க்ளிம்ப்ஸ் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 Kanguva Glimpse: Suriyas Kanguva Glimpse released now

க்ளிம்ப்ஸ் ஆரம்பம் முதல் இறுதி வரை கூஸ்பம்ப் கொடுத்துள்ளார் சிறுத்தை சிவா. 2.21 நிமிடங்கள் ஓடும் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து சூர்யா ரசிகர்கள் வெறித்தனமாக ஃபயட் விட்டு வருகின்றனர். க்ளிம்ப்ஸே இப்படியென்றால் மொத்த படமும் வேற லெவலில் இருக்கும் என்பது கன்ஃபார்ம். இதனிடையே, 2024 தொடக்கத்தில் கங்குவா ரிலீஸாகும் எனவும் அறிவித்துள்ளது.

கடந்தாண்டு கோவாவில் தொடங்கிய கங்குவா படப்பிடிப்பு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பீரியட் ஜானரில் செம்ம ஃபேண்டசியாக இப்படத்தை இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா. சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X