Kanguva - சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. கங்குவா அப்டேட் எப்போ தெரியுமா?
சென்னை: Kanguva (கங்குவா) சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் புதிய அப்டேட் எப்போது வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது.
சிறுத்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களை இயக்கினார். அவற்றில் விவேகம் தவிர மற்ற மூன்று படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனையடுத்து கடைசியாக ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் சிவாவை பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
சூர்யா கூட்டணி: அண்ணாத்த படத்துக்கு பிறகு சிவா சூர்யாவை வைத்து படம் இயக்க கமிட்டானார். ஸ்டூடியோ க்ரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கும் படத்துக்கு கங்குவா என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார்.பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் உருவாகிவருகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஷூட்டிங்: அண்ணாத்த படம் தோல்வியடைந்ததால் இந்தப் படத்தின் மூலம் தன்னை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கிறார் சிவா. சரித்திர படமாக உருவாகும் கங்குவாவின் ஷூட்டிங் கோவா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் சமீபத்தில் கொடைக்கானலில் நடந்து முடிந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.
அப்டேட்டே இல்லை: சூர்யா - சிவா இணைந்திருக்கும் படத்தின் அப்டேட்டாக கடைசியாக கங்குவா என பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி. அதன் பிறகு படம் குறித்த எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது. இதனால் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முன்வைத்துவருகின்றனர். இந்தச் சூழலில் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்ற புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என கூறப்படுகிறது.

ப்ரீ பிஸ்னெஸ்: இதற்கிடையே கங்குவா படம் பத்து மொழிகளில் உருவாவதால் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதனை ஈடு செய்யும் விதமாக படத்தின் ப்ரீ பிஸ்னெஸும் பட்டையை கிளப்பியிருப்பதாக தெரிகிறது. அதன்படி இதுவரை படமானது 450 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் ஆகியிருப்பதாக திரையுலகில் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே அதிக வியாபாரம் ஆகியிருப்பதும், அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாகவும் கங்குவாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான படம் இல்லை: படம் குறித்து அண்மையில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, இந்தப் படம் வழக்கமான படமாக இருக்காது. சிறுத்தை சிவாவின் மேக்கிங் அருமையாக இருக்கிறது. சில காட்சிகளை பார்த்தேன். சிறப்பாக வந்திருக்கிறது. தன்னையே அவர் புதுப்பித்துக்கொண்டபடி இந்தப் படம் நிச்சயம் அமையும் என பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











