Disha Patani: ப்பா.. எவ்ளோ அழகா பழத்தை கட் பண்றாங்க கங்குவா ஹீரோயின்.. யானைகளுக்கு செம தீனி!

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை திஷா பதானி யானைகளுக்கு பழங்களை வெட்டி உணவாக கொடுக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

வருண் தேஜ் நடிப்பில் 2015ல் வெளியான லோஃபர் படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானவர் திஷா பதானி.

Kanguva Heroine Disha Patani provides fruits and food to Elephants video goes trending

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியாக நடித்த எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியின் எக்ஸ் லவ்வராக நடித்து பாலிவுட்டில் அறிமுகமான திஷா பதானிக்கு தொடர்ந்து பல பாலிவுட் படங்கள் குவிந்து வருகின்றன.

கங்குவா ஹீரோயின்: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் எப்போதுமே ஹீரோயின்களுக்கென தனி ஸ்பெஷல் இருக்கும். சிறுத்தை படத்தில் தமன்னாவை அப்படியொரு ஹாட்டாக காட்டியிருப்பார். மீண்டும் வீரம் படத்திலும் தமன்னா நடித்திருப்பார்.

வேதாளம் படத்தில் ஸ்ருதிஹாசன், விவேகம் படத்தில் காஜல் அகர்வால், விஸ்வாசம் மற்றும் அண்ணாத்த படங்களில் நயன்தாரா என ஹீரோயின்களுக்கு பவர்ஃபுல்லான கதாபாத்திரங்களையும் கொடுத்துள்ளார். இந்நிலையில், கங்குவா படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹாட்டாகவும் அதே சமயத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kanguva Heroine Disha Patani provides fruits and food to Elephants video goes trending

பிரபாஸ் படத்திலும்: ஜாக்கி சான் உடன் குங்ஃபூ யோகா படத்தில் நடித்த திஷா பதானிக்கு தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களும், டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்புகளே குவிந்து வருகின்றன.

சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வரும் திஷா பதானி நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்திலும் ஹீரோயின் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. ஏற்கனவே தீபிகா படுகோன் உள்ள நிலையில், பிரபாஸ் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கிறாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

Kanguva Heroine Disha Patani provides fruits and food to Elephants video goes trending

யானைக்கு உணவு: விலங்கு நல ஆர்வலராக இருந்து வரும் நடிகை திஷா பதானி யானைகள் சரணாலயம் ஒன்றுக்கு விசிட் அடித்துள்ளார். அங்கே யானைகளுக்கு தர்பூசணி, பப்பாளி போன்ற பழங்களை அழகாக நறுக்கி ஒரு பெரிய வாளியில் போட்டும் மூங்கிலில் சில தானிய வகைகளை அடைத்தும் உணவாக வழங்கிய வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

பிகினி பேபியான திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்டோக்களை அடுக்கி வந்த நிலையில், இப்படி யானைகளுக்கும் உணவு அளிக்கும் வீடியோக்களை பதிவிட்டு தனக்குள் இருக்கும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி வருகிறார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X