Disha patani: போஸ் கொடுத்தது போதும்.. ஐடி கார்டு எங்கே...சூர்யா பட நடிகையை திணறவிட்ட போலீஸ்!

சென்னை: கங்குவா பட நடிகை திஷா பதானியை விமான நிலையத்தில் காவலர் ஒருவர் தடுத்துநிறுத்தி அலப்பறை செய்துள்ளார்.

எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான எம்எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் தோனியா நடித்திருந்தார்.

Kanguva heroine disha patani stopped at mumbai airport

அந்த படத்தில் அவரை காதலிக்கும் காதலியாக பாலிவுட்டில் அறிமுகமானார் திஷா பதானி.

இன்ஸ்டாவில் ஆக்டிவ்: நடிகை திஷா பதானி நடிகர் ஜாக்கிசான் நடித்த குங்ஃபூ யோகா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சர்வதேச அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ள திஷா பதானி இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய தாராள தரிசனத்தை காட்டி வரும் நிலையில், திஷா பதானி ரியல் லைஃபில் ஓர் ஆட்டிட்யூட் பர்சன் என ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.

காதல் கிசுகிசு: மேலும் இவர், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் மகன் டைகர் ஷெராஃபை திஷா பதானி காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அலெக்சாண்டர் எனும் மாடலுடன் திஷா பதானி டேட்டிங் செய்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இவரை சுற்றி சர்ச்சைகள் பல வந்தாலும், அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

Kanguva heroine disha patani stopped at mumbai airport

கங்குவா படத்தில்: திஷா பதானி தற்போது 10மொழிகளில் உருவாகி வரும் கங்குவா படத்தில் பீரியட் போர்ஷனில் நடித்து வருகிறார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்மாக உருவாகி வரும் இப்படத்தில் திஷா பதானி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

திணறவிட்ட அதிகாரி: இந்நிலையில்,படப்பிடிப்புக்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்த நடிகை திஷாவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக்கொண்டு புகைப்படம் எடுத்தனர். அவர்களுக்கு போஸ்கொடுத்துவிட்டு வந்த திஷா பதானியை தடுத்துநிறுத்திய போலீஸ் அதிகாரி ஒருவர், ஐடி கார்டை கேட்டுள்ளார். இதனால், சற்று பதறிய நடிகை கை பையில் ஐடி கார்டை தேடிபார்த்து கிடைக்காததால், விமானத்திற்குள் செல்ல காவலாளி அனுமதிக்கவில்லை. பின் உதவியாளர் வந்து ஐடி கார்டை காண்பித்தபின் தான் திஷா பதானி உள்ளே சென்றார். இந்த வீடியோவை பார்த்த பேன்ஸ் நடிகையை இப்படி திணறவிட்டீங்களா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X