கங்குவா.. மூத்தவர் ரஜினி மட்டுமில்லை இளையவர் சிவகார்த்திகேயனுக்கும் பயந்த சூர்யா?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கிறார். முதலில் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் ரஜினியின் வேட்டையன் ரிலீஸாவதால் அதற்கு மரியாதை கொடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக சூர்யா தெரிவித்திருந்தார். சூழல் இப்படி இருக்க கங்குவா படமானது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பாலாவின் வணங்கான் படத்தில் கமிட்டாகி அதிலிருந்து விலகிய சூர்யா; சிவாவின் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். சிவா இயக்கிய அண்ணாத்த படம் படுமோசமான தோல்வியை சந்தித்ததன் காரணமாக சூர்யாவை வைத்தும் சிவா செய்துவிடுவாரோ என்றே ரசிகர்கள் ஓபனாக சமூக வலைதளங்களில் பேசினார்கள். ஆனாலும் படத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஒருபக்கம் இருக்கவும் செய்தது.

பட்டையை கிளப்பிய அப்டேட்டுகள்: அந்த நம்பிக்கை பொய்த்துப்போகாத வகையில் படத்தின் க்ளிம்ப்ஸ், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், பெயர் என அனைத்துமே இருப்பதாக சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சிவா சூர்யாவை வைத்து எந்த சொதப்பலும் செய்திருக்கமாட்டார் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் படம் என்பதும்; படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு பாகங்கள்: கங்குவா படம் பீரியட் ஜானரில் உருவாவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானர் மட்டுமில்லை; தற்காலத்தில் நடக்கும்படியும் சிவா கதையை அமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு பாகங்களாக படம் உருவாகியிருப்பதாகவும்; அதன் ஷூட்டிங்கை மொத்தமாகவே சிவா முடித்துவிட்டார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. முக்கியமாக இப்படத்தில் கார்த்தியும் ஒரு ரோல் செய்திருப்பதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு மரியாதை: இப்படி எக்கச்சக்க ஹைப்போடு கங்குவாவுக்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். முதலில் படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் படம் ரிலீஸாவதால்; மூத்தவர் ரஜினிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக கங்குவா ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக சூர்யா ஒரு விழாவில் தெரிவித்திருந்தார். அதன்படி படமானது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சூர்யாவுக்கு பயமா?: கங்குவா ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டதும் சூர்யா ரசிகர்கள் உச்சக்கட்ட உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களில் ஒரு தரப்பினரோ சூர்யா பயந்துவிட்டாரா என்று கேள்விகளை எழுப்பிவருகிறார்கள். அதாவது முதலில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸை ரஜினிக்கு மரியாதை என்று தள்ளிவைத்தார்கள். அது மரியாதை என்று நொண்டி சாக்கு சொன்னாலும்; ரஜினியுடன் போட்டிப்போட்டு வெல்ல முடியாது என்றுதான் சூர்யாவும், கங்குவா படக்குழுவும் அந்த முடிவை எடுத்தார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால் வேட்டையன் ரிலீஸுக்கு பிறகு அக்டோபரிலேயே ரிலீஸ் செய்திருக்கலாமே.
அவ்வளவு ஏன் சூர்யாவுக்கு திரையுலகில் பல வருடங்கள் இளையவரான சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகிறது. அன்றைய நாள் கங்குவாவை ரிலீஸ் செய்திருக்கலாம். தன்னைவிட சிவகார்த்திகேயன் வியாபார ரீதியாக அசுரத்தனமாக வளர்ந்துவிட்டார் எனவே அவருடன் போட்டிப்போட்டால் தனது படத்தின் வசூல் அடி வாங்கிவிடும் என்று சூர்யா பயந்துவிட்டாரோ என்று சமூக வலைதளங்களில் குரல்களை கேட்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











