Kanguva - கங்குவா படக்குழு வைத்திருக்கும் டார்கெட் இதுவா?.. சூர்யா பிறந்தநாளில் ஹேப்பி நியூஸ்

சென்னை: Kanguva (கங்குவா) சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா படக்குழு ஒரு டார்கெட் ஃபிக்ஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸானது. அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்தச் சூழலில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார்.எதற்கும் துணிந்தவன் கலவையான விமர்சனத்தை பெற்றதால் இந்தப் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

 Kanguva Movie Crew Targeted on 1000 Crores Rupees Collection

பத்து மொழிகளில்: இந்தப் படமானது 100 கோடி ரூபாய்க்கும் மேலான பட்ஜெட்டில் தயாராகிறது. அதுமட்டுமின்றி மொத்தம் பத்து மொழிகளில் 3டியில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவிருப்பது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் என்பதும்; இதுதான் பத்து மொழிகளில் வெளியாகும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

நம்பிக்கையை காப்பாற்றுவாரா சிவா?: அதேசமயம் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி சிவா கிராமத்து பாணியிலான கதைகளை இயக்குபவர். ஆனால் கங்குவா படமோ பீரியட் படமாக உருவாகிறது. எனவே கங்குவா படத்தை சிறப்பாக கொடுத்து தன்னை அவர் நிரூபிப்பாரா என்ற கேள்வியை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டனர்.

பட்டையை கிளப்பிய க்ளிம்ப்ஸ்: இந்தச் சூழலில் சூர்யா இன்று 48ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். மேலும் படக்குழு சார்பில் கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் தங்களது சந்தேகத்தை சிவா அடித்து நொறுக்கிவிட்டார். அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிஸ்னெஸ்: படத்தின் ஷூட்டிங் இன்னமும் போய்க்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. விரைவில் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என தெரிகிறது. இதற்கிடையே இதுவரை படத்துடைய வியாபாரம் 500 கோடி ரூபாய் வரை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே சூர்யாவின் படங்களிலேயே அதிகம் ப்ரீ பிஸ்னெஸ் ஆன படமும் இதுதான் என தகவல் வெளியாகியிருக்கிறது.

1000 கோடி ரூபாய் டார்கெட்: இந்நிலையில் கங்குவா படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி 1000 ரூபாய் வசூலை படக்குழு டார்கெட் செய்திருக்கிறதாம். இதுவரை 500 கோடி ரூபாய் பிஸ்னெஸ் ஆகியிருப்பதாலும் மேற்கொண்டு திரையரங்க உரிமை போன்ற வியாபாரங்களில் இன்னும் சில நூறு கோடிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும் இந்த டார்கெட்டை ஃபிக்ஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் தயாரிப்பாளரும் ஒரு பேட்டியில் கேஜிஎஃப், பாகுபலி போன்ற படங்களின் சாதனையை கங்குவா உடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக சொன்னது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X