Actor Suriya: கங்குவா படத்தில் மாஸ் காட்டும் புலி காட்சி.. அட இப்படி ஒரு விஷயம் நடந்துருக்கா!

சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. படத்தில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தை பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா வரலாற்றுப் பின்னணியில் இயக்கியுள்ளார்.

முன்னதாக இந்தப் படத்தின் அவுட்புட்டை பார்த்து சூர்யா மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியான நிலையில் அதில் வசனங்கள் இல்லாமல் படத்தின் பிரம்மாண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முன்னதாகவே இந்தப் படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படங்களின லிஸ்ட்டில் இணைந்துள்ள நிலையில், இந்த டீசரும் அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Kanguva movie producer opens about the Tiger shot in teaser

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மற்றும் அவரது கதைத்தேர்வு மிகச்சிறப்பாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் முன்னதாக அவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று, ஜெய்பீம், விக்ரம் போன்ற படங்கள் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுத் தந்துள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. சர்வதேச அளவில் 10 மொழிகளில இந்தப் படம் ரிலீசாகவுள்ள சூழலில் தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

10க்கும் மேற்பட்ட கெட்டப்புகள்: கங்குவா படத்தில் நடிகர் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கமர்ஷியல் படங்களை மட்டுமே கொடுத்து ரசிகர்களை கவர்ந்துவந்த இயக்குநர் சிவா, இந்தப் படத்தில் வரலாற்றுக் கதைக்களத்தை எடுத்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. படத்தில் சூர்யாவிற்கு திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். படத்தில் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகிவரும் சூழலில் படத்தின் ரிலீஸ் அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நிஜமான புலி: படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியானது. இதில் வசனங்கள் இல்லாமல் படத்தின் பிரம்மாண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த டீசரில் புலி ஒன்று காட்டப்பட்டிருந்தது. பிரம்மாண்டமாக காணப்பட்ட இந்தக் காட்சி நிஜமான புலியை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் முறையாக அனுமதி பெறப்பட்டு இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் இயக்குநர் தற்போது தெரிவித்துள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு: மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் மிகச்சிறப்பாக முடிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களின் சூட்டிங்கும் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் எந்தப் படமும் வெளியாகாத நிலையில் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பாக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X