Surya: கங்குவா படத்தில் வில்லனாக இணையும் பிரபல பாலிவுட் ஹீரோ.. சூப்பர்ல!
சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வருகிறது கங்குவா படம். வரலாற்று பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தை இயக்கிவருகிறார் சிவா.
கங்குவா படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் பிரபல பாலிவுட் நாயகி திஷா பட்டானி. சர்வதேச அளவில் 10 மொழிகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.
சூர்யாவின் பிறந்தநாளையொட்டி கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கங்குவா படத்தில் சூர்யாவுடன் மோதவுள்ள மெயின் வில்லன்: நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது கங்குவா. சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு கங்குவா என கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெயரிடப்பட்டது. இந்நிலையில் அப்டேட்கள் எதுவும் இல்லாமல் இருந்த இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் வாய்சில் இந்த வீடியோ மிரட்டலான சூர்யாவை ரசிகர்களுக்கு காட்டியுள்ளது.
1500 ஆண்டுகளுக்கு பிந்தைய காலகட்டத்தை கதைக்களமாக கொண்டு கங்குவா படம் உருவாகிவருவதாக படத்தின் இயக்குநர் சிவா தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அத்துடன் தற்போதைய காலகட்டத்தையும் இணைக்கும் வகையில் படம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கங்குவா என்றால் நெருப்பின் மகன் என்றும் சிவா விளக்கமளித்துள்ளார். அடுத்த ஆண்டு பண்டிகைக் கொண்டாட்டமாக கங்குவா படம் வெளியாகவுள்ளதாகவும் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த மலை மற்றும் காட்டுப்பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த கெட்டப்பிற்காக நடிகர் சூர்யா 2 மணிநேரங்கள் மேக்கப் போட்டதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும் படம் சிறப்பாக வரும் வகையில் சூர்யா 100 சதவிகிதம் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாகவும் சிவா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நட்டி நட்ராஜ் இணைந்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழு அப்டேட் தெரிவித்தது. அவரது போர்ஷன்கள் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் மெயின் வில்லன் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவரது போர்ஷன்கள் அடுத்த மாதத்தில்தான் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சூர்யா -பாபி தியோல் காம்பினேஷன் காட்சிகள் அடுத்த மாதத்தில் பாங்காக்கில் நடக்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் போர்க் காட்சிகள் அதிகமான அளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னதாக இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். தற்போது படத்தின் கிளிம்ப்ஸ் மிரட்டலாக வெளியாகியுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications