Kanguva Release - கங்குவா பட ரிலீஸ் எப்போது தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
சென்னை: Kanguva Release (கங்குவா ரிலீஸ்) கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. ஆனால் அவருக்கு அந்தப் படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. ஞானவேல் ராஜா தயாரிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படமானது வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்பு: சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படத்துக்கான பட்ஜெட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து சம்பவம் செய்வாரா இல்லை சரித்திரம் படைப்பாரா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சூர்யாவின் கரியரில் முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.
க்ளிம்ப்ஸ்: சிவா இயக்கத்தில் சூர்யா கமிட்டட் என்று செய்தி வெளியானதும் சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஏனெனில் இதற்கு முன்னதாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் அவர்கள் கண் முன் வந்துபோனது. ஆனால் தன் மேல் சந்தேகப்பட்டவர்களுக்கு கங்குவா க்ளிம்ப்ஸ் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர். க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது.
என்ன கதை: கங்குவா படம் முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும்தான் பீரியட் படமாக கங்குவா உருவாகிறது. மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும்படிதான் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சிவா. அதேபோல் அந்த பீரியட் பகுதிதான் 3டியில் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.
எப்போது ரிலீஸ்: இந்நிலையில் கங்குவா படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு தாய்லாந்து சென்றிருப்பதாகவும் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஷூட்டிங் நடக்கும் என்றும் இதுதான் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என்றும் கூறப்படுகிறது. மேலும் படமானது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











