Kanguva Box Office: கங்குவா படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் இதுதான்.. தயாரிப்பு நிறுவனம் வெளிப்படை!

சென்னை: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், நட்டி நட்ராஜ், கருணாஸ், போஸ் வெங்கட், வசுந்தரா உள்ளிட்ட பலர் நடித்த கங்குவா திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியானது.

கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் போட்ட இசை சரியில்லை என்றும் சிறுத்தை சிவாவின் கதை சொதப்பல் என்றும் கடுமையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் சோஷியல் மீடியாவில் கங்குவா டிசாஸ்டர் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்யும் அளவுக்கு டிரெண்டாகியுள்ளன.

kanguva box office suriya

ஆனால், அதெல்லாம் கிடையாது என்றும் கங்குவா படம் அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பொதுமக்கள் மற்றும் குடும்பங்கள் இந்த படத்தை கொண்டாடுவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்த நிலையில், தற்போது கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

60 கோடியை தொடவில்லை: கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் வசூலை முறியடிக்குமா என்கிற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், வெறும் 58.62 கோடி ரூபாய் வசூலை மட்டுமே பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தற்போது வெளியிட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் 80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், அதன் மொத்த வசூலே 500 கோடி தான் வந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி வசூல் செய்த நிலையில், ஒட்டுமொத்தமாகவே 500 கோடிக்குள் தான் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஞானவேல்ராஜா உறுதி: கங்குவா 2 படத்தை எடுப்பதில் ஞானவேல்ராஜா ரொம்பவே உறுதியாக உள்ளார். கங்குவா படம் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் ஓவர்சீஸ் என அனைத்து இடங்களிலும் 2வது நாளிலும் விமர்சனங்களை கடந்து நல்லாவே ஓடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

kanguva box office suriya

அமரன் வசூலை கடக்குமா?: முதல் நாள் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் 43 கோடி ரூபாய் வசூலை செய்தது. அந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. மேலும், அதன் வசூல் 300 கோடியை நோக்கி நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள கங்குவா டிக்கெட் புக்கிங் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கும் சேர்த்தே குறைந்து வருகிறது என்றும் முதல் வாரம் மட்டுமே ஓடும் என்றும் அடுத்த வாரம் படம் ஓடுவதே கஷ்டம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக கங்குவா திரைப்படம் 180 கோடி முதல் 200 கோடி தான் வசூல் செய்யும் என்றும் அமரன் படத்தின் வசூலை முந்த வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.

சூர்யா 44 படத்துக்கும் சிக்கல்: தியேட்டருக்கும் சூர்யாவுக்கும் ராசியே கிடையாதா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து கங்குவா படமும் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில், சூர்யா 44 படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகும் என்றும் கார்த்திக் சுப்புராஜாவது சூர்யாவையும் அவரது உழைப்பையும் வீணடிக்காமல் இருந்தாலே நல்லது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X