Suriya Jyothika: சூர்யா இந்த அளவுக்கு பொசஸிவ்வான ஆளா? நடந்ததை சபையில் சொல்லியும் ஸ்கோர் செய்யறாரே!
சென்னை: தமிழ் சினிமா நட்சத்திர தம்பதிகளில் பெரும்பாலான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி என்றால் அது சூர்யா - ஜோதிகா ஜோடியைக் குறிப்பிடலாம். சூர்யா வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம், ஜோதிகாவின் புகழைப் பாடிவிடுவார். சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அதுவே இவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதிகளாக இருக்க முக்கிய காரணம் என ரசிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சூர்யா ஜோதிகா குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் சூர்யா ரொம்பவே பொசஸிவ்வான ஆளுப்பா என ரசிகர்கள் கமெண்ட் செய்யும் அளவுக்கு உள்ளது.
சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் ஜோதிகா படங்களில் நடிக்கவில்லை. சூர்யா ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற பெண் குழந்தை உள்ளது. தியாவுக்கும் சினிமாவில் கால் பதிக்க ஆசை இருப்பதால், அவரையும் சினிமா சார்ந்த படிப்பில் கவனம் செலுத்த மும்பையில் தனியார் கல்லூரியில் சேர்த்துவிட்டுள்ளனர். தியா இயக்கத்தில் ஆவணப்படம் வெளியாகி விருதுகளை வென்றிருந்தது.

ஜோதிகா திருமணமான பின்னர் படங்களில் நடிக்கவில்லை. ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்து அவ்வப்போது தலை காட்டிக் கொண்டு இருந்தார். இவர்களுக்கு தியா பிறந்த பின்னர் அவரை வளர்ப்பதிலும் குடும்பத்தை பராமரிப்பதிலும் ஈடுபட்டு வந்தார். அவ்வளவுதான் ஜோதிகா நடிக்கவே மாட்டார் என நினைத்துக் கொண்டு இருக்கும்போது, சூர்யாவுடன் இணைந்து ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்தார்.
ஜில்லுனு ஒரு காதல்: இந்தப் படத்தின் கதையை இயக்குநர் கிருஷ்ணா சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியரிடம் கூறியுள்ளார். படத்தின் கதை ஜோதிகாவுக்கு ரொம்ப பிடித்துப் போனது. ஆனால் சூர்யா கதையில் இப்படி மாற்றம் செய்யலாம், அப்படி மாற்றம் செய்யலாம் என கூறிக்கொண்டு இருந்துள்ளார். மேலும் தான் கூறிய மாற்றங்களைச் செய்தால் படத்தில் தான் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜோதிகா: இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டபோது இதுதொடர்பாக சூர்யா பேசியுள்ளார். அப்போது மேலே குறிப்பிட்ட விஷயங்களைச் சொன்ன சூர்யா, "படத்தின் கதையில் நான் சில மாற்றங்களைச் செய்யச் சொல்லிக் கொண்டு இருந்தேன். உடனே ஜோதிகா எனக்கு இந்தப் படத்தின் கதை ரொம்ப பிடித்துவிட்டது. தான் இந்தப் படத்தில் நடிப்பதாகவும், உனக்கு விருப்பம் இருந்தால் நடி இல்லையென்றால் பரவாயில்லை எனச் சொன்னார். இதனை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஜோதிகாவுடன் இன்னொரு நடிகர் நடிப்பதை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே நானும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்" எனக் கூறியுள்ளார். மேலும் இதனை சூர்யா கங்குவா படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சில் கலந்து கொண்டபோது கூறியுள்ளார்.

கங்குவா: சூர்யாவின் இந்தப் பேச்சைக் கேட்ட பலரும் சூர்யா ரொம்பவே பொசஸிவ்வான ஆளுப்பா என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஜில்லுனு ஒரு காதல் படம் தமிழ் சினிமா காதல் படங்களில் மிகவும் முக்கியமான படம். மேலும் இப்படத்தினை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் அண்மையில் கொண்டாடினர். சூர்யா நடிப்பில் அடுத்து கங்குவா படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதுமட்டும் இல்லாமல், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











