அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறதா கங்குவா?.. புரளியை கிளப்பிய ரசிகர்.. கடுப்பான தயாரிப்பாளர்?

சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகாது என்றும் அடுத்த ஆண்டு வெளியாகும் என ரசிகர் ஒருவர் பதிவிட்ட போஸ்ட்டை பார்த்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பதறி அடித்து போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் சூர்யா நடித்த கங்குவா உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு சம்மருக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை, அந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

Suriya Kanguva Dhananjeyan Disha Patani Suriya 44 44

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், திடீரென அடுத்த ஆண்டுக்கு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என நெட்டிசன் ஒருவர் ட்வீட் போட்டு சூர்யா ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளார்.

சூர்யாவின் பிரம்மாண்ட படம்: பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்த நிலையில், நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டப்பிங் பணிகள் வரை சூர்யா முடித்து விட்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக காத்திருக்கிறது. அந்த படம் பாகுபலியை விட சிறப்பாக உருவாகி உள்ளதாகவும் இந்த ஆண்டு வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்திய பேட்டிகளில் கூறி வருகிறார்.

அடுத்த ஆண்டு ரிலீஸா?: இந்நிலையில், தற்போது கங்குவார் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தனஞ்சயன் சமீபத்திய பேட்டியில் கூறியதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட ட்வீட் தீயாக பரவியது. அதை பார்த்து தனஞ்செயனே ஷாக் ஆகி விட்டார்.

Suriya Kanguva Dhananjeyan Disha Patani Suriya 44 44

பொய்யான தகவல்: உடனடியாக ஏன் இப்படி பொய்யான தகவல் பரப்புகின்றார்கள் என்றே தெரியவில்லை என தனஞ்சயன் ட்வீட் போட்டுள்ளார். கங்குவா படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. அதனால், தான் இப்படியொரு ட்விட்டை விளையாட்டாக போட்டேன் என அந்த ரசிகர் விளக்கம் கொடுத்துள்ளார். தீபாவளிக்கு பல படங்கள் போட்டியிட காத்திருக்கும் நிலையில், கங்குவா திரைப்படம் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகுமா என வெயிட் பண்ணி பார்ப்போம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X