Kanguva :ஆரம்பமே அசத்தல்.. தெறிக்கவிட்ட சூர்யா.. ரிலீஸ்க்கு முன்பே பல கோடிக்கு விற்பனையான கங்குவா!
சென்னை : சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கங்குவா : ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. தற்போது படத்தின் சூட்டிங் கொடைக்கானலை அடுத்த தாண்டிக்குடியில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. இந்த கொடைக்கானல் சூட்டிங் மே மாதம் மத்தியில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 மொழிகளில் : இந்தப் படத்தின் தலைப்பு கடந்த மாதம் பிரமாண்டமான அறிவிப்புடன் வெளியானது. நடிகர் சூர்யாவின் முதல் பான் இந்திய படமான இத்திரைப்படம், தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இரண்டு பாகமாக வெளியாக உள்ளதால் அனைத்து மொழிக்கும் பொருத்தமாக இருக்கும் வகையில் கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
பல கோடிக்கு விற்பனை: இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை குறித்த சமீபத்திய செய்திகள் வைரலாகி வருகிறது. அதன்படி அமேசான் பிரைம் வீடியோ படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.80 கோடிக்கு வாங்கி உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். அமேசான் ஃபிரைம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளுக்கு மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை செலுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். இந்தி உள்ளிட்ட பிற மொழிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள் : இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை கங்குவா ஈட்டி தந்துள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள கங்குவா படம் சூர்யாவின திரைப்பயணத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications