Disha Patani net worth: ’கங்குவா’ ஹீரோயினுக்கு பிறந்தநாள்.. திஷா பதானி சொத்து மதிப்பு இதோ!

சென்னை: தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை திஷா பதானி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். லோஃபர் எனும் தெலுங்கு படத்தின் மூலம் 2015ல் ஹீரோயினாக டோலிவுட்டில் அறிமுகமானவர் திஷா பதானி.

பாலிவுட்டின் பிகினி பேபியாக இளைஞர்களை கவர்ந்து வரும் நடிகை திஷா பதானி நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

31வது பிறந்தநாளை கொண்டாடி வரும் திஷா பதானியின் சொத்து மதிப்பு குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

Kanguva star Disha Patani celebrates her 31st birthday today, here her net worth and assets details

போலீஸ்காரர் மகள்: உத்தர பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த நடிகை திஷா பதானியின் அப்பா ஜெகதீஷ் சிங் பதானி காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். அவரது அம்மாவும் ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோவில் உள்ள அமிதி பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் படித்த திஷா பதானி மாடலிங் துறையில் ஆர்வம் செலுத்திய நிலையில், அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தினார்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார்.

பர்த்டே கொண்டாடும் பிகினி பேபி: நடிகை திஷா பதானி மலங் படத்தில் எப்படி கடலில் இருந்து பிகினி உடையில் எழுந்து வந்து ரசிகர்களுக்கு காய்ச்சலை கொடுத்தாரோ அதே போல இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஹாட் பிகினி போட்டோக்களை அடுக்கி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

Kanguva star Disha Patani celebrates her 31st birthday today, here her net worth and assets details

1992 ஜூன் 13ம் தேதி பிறந்த நடிகை திஷா பதானி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படம் பாலிவுட்டில் இவரை முன்னணி நடிகையாக மாற்றியது. ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்திலும் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சொத்து மதிப்பு: 31 வயதான நடிகை திஷா பதானி 8 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஒரு படத்துக்கு சம்பளமாக 8 கோடி ரூபாய் வரை வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விளம்பர படங்கள், கல்வின் கெய்ன் உள்ளாடை நிறுவனத்தின் தூதர் என கலக்கி வரும் திஷா பதானி ஒட்டுமொத்தமாக 75 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரியாக உள்ளார் எனக் கூறுகின்றனர்.

Kanguva star Disha Patani celebrates her 31st birthday today, here her net worth and assets details

வீடு மற்றும் கார்கள்: விளம்பரங்களில் நடிக்க 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வரும் திஷா பதானி ஒரு வருஷத்துக்கு 12 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம். மும்பையில் உள்ள பாந்த்ராவில் 2016ம் ஆண்டு பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதன் மதிப்பு 5 கோடி ரூபாய் என்கின்றனர்.

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், 65 லட்சம் மதிப்புள்ள Jaguar F-Pace, 50 லட்சம் மதிப்புள்ள Mercedes C200, 22 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிவிக் உள்ளிட்ட கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

Kanguva star Disha Patani celebrates her 31st birthday today, here her net worth and assets details

கங்குவா அப்டேட் வருமா?: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் கவர்ச்சி ஹீரோயினாக நடித்து வரும் திஷா பதானியின் பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ்க்ளூசிவான கங்குவா பட அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கங்குவா படத்தில் நடிகை திஷா பதானியின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த போஸ்டரை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X